Latest:
ArticleEducation News

11, 12-ஆம் வகுப்பு வீட்டிலிருந்து படித்து தேர்வு எழுத

10-ஆம் வகுப்பு படித்துவிட்டு அதற்க்கு மேல் படிக்காமல் இருப்பவர்கள் வீட்டில் இருந்தே 11, 12-ஆம் வகுப்பு படித்து, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள 11, 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத தற்போது விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க கடைசி தேதி 20-12-19

இதற்க்கான முழு விபரத்தை பார்ப்போம்

தற்போதுள்ள நடைமுறை படி 10 -ஆம் வகுப்பு முடித்ததும் நேரடியாக +2 வகுப்பு எழுத முடியாது. முதலில் +1 எழுதி தேர்சி பெற்று பின்னர் +2 வகுப்பிற்க்கு விண்ணப்பிக்க வேண்டும்.

11- ஆம் வகுப்பு தேர்வு எழுத தகுதி:
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓர் ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும், 15.5 வயது (பதினைந்து அரை வயது)-க்கு மேல் இருக்க வேண்டும்

12- ஆம் வகுப்பு தேர்வு எழுத தகுதி:
11-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், 11-ஆம் வகுப்பில் ஒரு சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல் (பெயிலலாகி) இருந்தாலும் +1 -க்கும், +2 விற்க்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்

எப்படி விண்ணப்பிப்பது ?

தமிழக அரசு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஒவ்வொறு மாவட்டத்திலும் அரசு தேர்வுகள் சேவை மையங்களை (Government Examinations Service centers) ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட வாரியாக இந்த சேவை மையங்களின் விபரம் இந்த http://www.dge.tn.gov.in/…/service_centre_2019_HSE.pdf லின்கில் உள்ளது

உங்களுக்கு அருகில் உள்ள மையங்களுக்கு கீழ்காணும் ஆவணங்களுடன் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்,

எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள் :
a) 10-ஆம் வகுப்பு மதிபெண் சான்றிதழ் (10th mark sheet)
b) மாற்று சான்றிதழ் (TC)

கட்டணம் :
தேர்வு கட்டணம் ரூ.185
விண்ணப்ப கட்டணம் ரூ.50
மொத்தம் ரூ.235

எந்த எந்த பாட பிரிவிற்க்கு விண்ணப்பிக்கலாம் ?

+1, +2 – ல் பல பாட பிரிவுகள் இருந்தாலும் வீட்டில் இருந்து படித்து தேர்வு எழுதுபவர்கள் கீழ்காணும் பிரிவில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

1. வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்கு பதிவியல் (History, Economics, Commerce, Accountancy)
2. பொருளியல், அரசியல் அறிவியல், வணிகவியல், கணக்கு பதிவியல் (Economics, Political science, Commerce, Accountancy)
3. பொருளியல், வணிகவியல், கணக்கு பதிவியல், அறவியல் மற்றும் இந்திய கலாச்சாரம் (Economics, Commerce, Accountancy, Indian culture)
4.பொருளியல், வணிகவியல், கணக்கு பதிவியல், சிறப்பு மொழி (தமிழ்)(Economics, Commerce, Accountancy, Special Language)
5.பொருளியல், வணிகவியல், கணக்கு பதிவியல், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் (Economics, Commerce, Accountancy, Business mathematics and statistics)

இந்த 4 பாடங்கள் மற்றும் தமிழ், ஆங்கிலம் சேர்த்து மொத்தம் 6 பாடங்கள்
தேர்விற்க்கு தயாராவது எப்படி ?

10- ஆம் வகுப்பு படித்து, வீட்டில் இருந்தே +1, +2 பின்னர் பட்ட படிப்பு படிக்கலாம் என நினைப்பவர்கள் இந்த தேர்விற்க்கு தற்போது விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுத இன்னும் 3 மாதங்கள் இருப்பதால் எளிதில் 6 பாடங்களையும் படித்து தேர்வில் வெற்றி பெற்று விடலாம்.பாட புத்தகங்கள் கடைகளில் கிடைக்கும், இணையதளத்தில் இருந்து எளிதில் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம். தினமும் 4 மணி நேரம் ஒதுக்கி படித்தால் 3 மாதத்தில் எளிதில் அனைத்து பாடத்தையும் படித்து விடலாம்.

தனி தேர்வாளர் முறையில் 11, 12-ஆம் வகுப்பிற்க்கு விண்ணபிக்கும் முழு தகவலும் இந்த http://www.dge.tn.gov.in/…/HSC_March2020_I_II_pvt… லின்கில் உள்ளது

கூடுதல் விளக்கம் தேவைபட்டால் இந்த பதிவின் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்https://www.facebook.com/wisdomkalvi/posts/971047329935184

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *