Latest:
ArticleEducation News

துணை மருத்துவ படிப்புகளில் டிப்ளோமா, சான்றிதழ் படிப்புகள் (Para-medical Diploma and Certificate course) படிக்க

துணை மருத்துவ படிப்புகளில் டிப்ளோமா, சான்றிதழ் படிப்புகள் (Para-medical Diploma and Certificate course) படிக்க தற்போது விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள், NEET தேர்வு எழுதாதவர்கள், மருத்துவ துறையில் ஏதாவது ஒரு படிப்பு படிக்க விரும்பினால், துணை மருத்துவ டிப்ளோமா, சான்றிதழ் படிப்புகள் (Para-medical Diploma, Certificate course) படிக்க தற்போது விண்ணப்பிக்கலாம், விண்ணபிக்க கடைசி தேதி செப்டம்பர் 18 (18-09-2019)

மருத்துவ டிப்ளோமா (Diploma) படிப்புகள் 2 ஆண்டு படிப்பாகும், மருத்துவ சான்றிதழ் படிப்புகள் (Certificate course) ஓராண்டு படிப்பாகும்.

இதற்க்கான வயது வரம்பு 30 முதல் 32 ஆகும். எனவே படித்து முடித்து வேலை இல்லாத +2 படித்தவர்கள் இந்த படிப்புகளை படித்து மருத்துவ துறையில் வேலைக்கு சேரலாம்.

அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் இந்த படிப்புகள் படிக்க வருட கட்டணம் ரூ.600 முதல் ரூ.2500 வரையில் இருக்கும்

Diploma in MLT, Diploma in D.R.D.T, Diploma in Optometry, Diploma in Pharmacy போன்ற படிப்புகள் டிப்ளோமா பிரிவில் உள்ளது

E.E.G./E.M.G. Course Technician, Orthopaedic Technician, Theatre Technician, Dialysis Technician, Emergency Care போன்ற பல்வேறு படிப்புகள் சான்றிதழ் படிப்பு (Certificate course) பிரிவில் உள்ளது

கல்வி தகுதி :
12- ஆம் வகுப்பில் கீழ்காணும் பாட பிரிவை தேர்ந்தெடுத்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

a) இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) மற்றும் உயிரியல் (Biology)
b) இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) மற்றும் தாவரவியல் (Botany), விலங்கியல் (Zoology)
குறைந்தது 40 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :
www.tnhealth.org , www.tnmedicalselection.org இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதை நகல் (பிரின்ட் அவுட்) எடுத்து, கீழ்காணும் ஆணவங்களின் நகல்களை (Attested copy) இணைத்து A4 size cloth lined கவரில் கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
THE SECRETARY,
SELECTION COMMITTEE,
162, PERIYAR E.V.R. HIGH ROAD,
KILPAUK, CHENNAI – 600 010.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
• 10-ஆம், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (10th, +2 mark sheet)
• 12-ஆம் வகுப்பு ஹால் டிக்கட் (+2 hall ticket)
• மாற்று சான்றிதல் (Transfer Certificate)
• சாதி சான்றிதழ் (Community Certificate)
• குடும்பத்தில் முதல் பட்டதாரி என்றால், கல்வி உதவி பெற First graduate certificate
• 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளியில் படித்தற்க்கான சான்று

இந்த சேர்க்கை பற்றிய முழுவிபரம் கீழ்காணும் லின்கில் உள்ளது
https://tnmedicalselection.net/news/08082019213401.pdf

துணை மருத்துவ டிப்ளோமா, சான்றிதழ் படிப்புகள் (Para-medical Diploma, Certificate course) படிப்புகள் பற்றி சந்தேகம் இருந்தாலோ, paramedical counseling பற்றி கூடுதல் விபரம் தேவைபட்டாலோ கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *