CAT தேர்வு
MBA படிக்க படிக்க விருப்பமா ? CAT தேர்விற்க்கு இப்போது விண்ணப்பிக்கலாம்
இந்தியாவில் படித்து முடித்தவுடன் மிக அதிக சம்பளம் தரும் படிப்புகளில் IIM-ல் உள்ள MBA படிப்பும் ஒன்று (IIM-ல் இதை PGP படிப்பு என்றும் அழைப்பார்கள்). அதிக சம்பளமும், பெரிய நிறுவங்களை நிர்வகிக்கும் பொருப்புகளையும் பெற CAT என்ற நுழைவு தேர்வை மாணவர்கள் எழுதி தேர்சி பெற வேண்டும். இப்போது இந்த தேர்வு எழுத விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 18 (18/09/2019).
தமிழகத்தின் திருச்சி உட்பட இந்தியாவில் பல இடங்களில் IIM-கள் உள்ளன. உலக அளவில் பொருளாதாம் மற்றும் மேலாண்மை துறையில் மிக பெரிய பொருப்புகள் வகிப்பவர்கள் இந்த IIM- ல் படித்தவர்கள். CAT மதிப்பெண்ணை வைத்து இன்ன பிற அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் MBA படிப்பில் நேரடியாக சேரலாம். தமிழகத்தில் திருச்சியில் உள்ள NIT, வேலூரில் உள்ள VIT, சென்னையில் உள்ள Loyola கல்லூரி உட்பட பல கல்லூரிகளில் CAT மதிப்பெண்ணை வைத்து MBA சேரலாம்.
CAT நுழைவு தேர்வை பற்றிய விபரம் :
தேர்வு நடைபெறும் நாள் : நவம்பர் 24 (24/11/2019)
இது கணினியில் எழுதும் தேர்வாகும் (Computer based exam). CAT தேர்வு மூன்று பகுதிகளை கொண்டது. முதல் பகுதி Verbal Ability and Reading Comprehension (VARC), இரண்டாம் பகுதி Data Interpretation and Logical Reasoning (DILR), மூன்றாம் பகுதி Quantitative Ability. ஓவ்வொரு தேர்வு எழுத 60 நிமிடங்கள் ஒதுக்கப்படும், மொத்தம் 180 நிமிடங்கள். மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் தேர்ந்தெடுக்கும் முறை வகை ( Multiple Choice Questions) மற்றும் நேரடி கேள்வி வகையில் இருக்கும். தேர்ந்தெடுக்கும் முறை கேள்விகள் (Multiple Choice Questions) பகுதியில் தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கபடும் (Negative marking). நேரடி கேள்வி வகைகளில் Negative marking கிடையாது.
தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :
1. ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்து இருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் எழுதலாம்
2. குறைந்தது 50% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.
3. இந்த தேர்வை எழுத வயது வரம்பு இல்லை.
இட ஒதுக்கீடு : பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு 27%, SC – 15 %, ST – 7.5 % இட ஒதுக்கீடு உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க முடியும்.
https://cdn.digialm.com/…/756/62128/Registration.html என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்விண்ணப்ப கட்டணம் ரூ.1900, தேர்வு எழுதும் அனுமதி சீட்டை (Admid card) ஆன்லைனில் பெற்றுகொள்ளலாம்.
சென்னை , மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை உட்பட இந்தியாவில் பல நகரங்களில் தேர்வு நடைபெறும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடபடும்.
தேர்வு முடிவுகள் வெளியானவுடன், அனைத்து ஐஐஎம்-களின் இணையதளங்களில் தர வரிசை பட்டியல் வெளியிடபடும். அதற்கேற்ப மாணவர்கள் அழைக்கப்படுவார்கள், எழுத்து தேர்வு (Written Ability Test), குழு விவாத திறமை (Group Discussion), நேர்முக தேர்வு (Personal Interviews) மூலம் மாணவர்கள் குறிப்பிட்ட ஐஐஎம் – களில் சேர்க்க படுவார்கள். CAT 2019 மதிப்பெண்ணுக்கான validity ஓர் ஆண்டு மட்டுமே.
இந்த தேர்வை பற்றி விபரங்கள் https://iimcat.ac.in இணையதளத்தில் உள்ளது, மேலும் விபரங்கள் தேவைபட்டால் கமென்டில் கேளுங்கள்.
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.