Latest:
ArticleEducation News

B.Arch (கட்டிட நிர்மான கலை) படிக்க NATA தேர்வு

பொறியியல் மருத்துவம் படிக்க விருப்பம் இல்லாத சில மாணவர்கள் Architecture (கட்டிட நிர்மான கலை) படிப்பை தேர்ந்தெடுகின்றனர், B.Arch படிக்க NATA தேர்வில் கட்டாயம் தேர்சி பெற்றிருக்க வேண்டும். +2-ல் கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) படித்த மாணவர்கள் இந்த NATA தேர்வை எழுதலாம். மற்ற குரூப் மாணவர்கள் எழுத முடியாது.

தமிழகத்தில் B.Arch கல்லூரிகள் எண்ணிக்கை குறைவு , இடங்களும் குறைவு, பொருளாதாரமும் அதிகமாக செலவாகும். எனவே B.Arch படித்து அந்த துறையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவர்கள் மட்டும் இந்த தேர்வை எழுதவும்.

NATA தேர்வின் விபரங்களை பார்ப்போம்

தேர்வு நாள் : ஜூலை 7
தேர்வு நடை பெறும் இடங்கள் : சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, வேலூர்
தேர்வு கட்டணம் : ரூ.1800

தேர்விற்க்கு விண்ணப்பிக்க :
இந்த www.nata.in/ இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வை பற்றி :
இந்த தேர்வு 2 தாள்களை கொண்டது, மொத்தம் 200 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்க்கபடும்.

முதல் தாளில் MCQ வகையில் (சரியன விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறையில்) கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 120 மதிப்பெண், குறைந்தது 30 மதிப்பெண் எடுக்க வேண்டும்
முதல் தாள் இரண்டு பகுதிகளை கொண்டது. முதல் பகுதியில் கணிதம் சார்ந்த கேள்விகள் கேட்க்கப்படும். இரண்டாம் பகுதியில் பகுத்தறிவு சம்மந்தமான கேள்விகள் கேட்க்கப்படும்.

இரண்டாம் தாளில் வரைதல் (Drawing) சம்மந்தமாக 2 கேள்விகள் கேட்க்கப்படும், மொத்தம் 80 மதிப்பெண். இரண்டாம் தாளில் குறைந்தது 20 மதிப்பெண் எடுக்க வேண்டும்

இரண்டு தாள்களும் சேர்த்து 200 மதிப்பெண்கள்

B.Arch கலந்தாய்வு (counseling) முறை :

+2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்னையும், NATA தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும் வைத்து B.Arch கட் ஆப் மதிப்பெண் கணக்கிடபடுகின்றது. அதாவது +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண் 200-க்கு மாற்றப்பட்டு, அதனுடன் NATA தேர்வின் மதிப்பெண்ணை கூட்டினால் வருவதுதான் B.Arch கட் ஆப் மதிப்பெண். இது 400 மதிப்பெண்ணுக்கு இருக்கும்.

உதாரணத்திற்க்கு ஒரு மாணவர் +2 தேர்வில் 75 % சதவீத மதிப்பெண் எடுத்து இருந்தால் +2 கட் ஆஃப் 150, NATA-தேர்வில் 80 மதிப்பெண் எடுத்து இருந்தால் மொத்த B.Arch கட் ஆஃப் 230 (150 + 80).

இந்த கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை பட்டியல் (Rank list) தயாரிக்கப்பட்டு மாணவர்கள் கலந்தாய்விற்க்கு (counseling) அழைக்கப்படுவார்கள்.

NATA தேர்வு பற்றிய விபரங்கள் www.nata.in/ இணையதளத்தில் உள்ளது

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *