Latest:
Government JobsGovernment News

தமிழக காவல் துறையில் துணை ஆய்வாளர் (Sub-Inspector) பணியில் சேர

தமிழக காவல் துறையில் துணை ஆய்வாளர் (Sub-Inspector) பணியில் சேர தற்போது விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களை பற்றிய அறிவிப்பு முன்னரே வந்திருந்தாலும் இன்று (20-03-19) தான் பணிக்கு விண்ணப்பிக்கும் இணையதள லின்க் (Application window) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர்வதற்க்கான விபரங்களை பார்ப்போம்

மாத சம்பளம் : ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை

மொத்த காலி பணிடம் : 969 (இட ஒதுக்கீடு அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படும்)

கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்ட படிப்பு (Any Degree), பள்ளியில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்

வயது வரம்பு :
பொது பிரிவு : 28
BC/BC (முஸ்லீம்) : 30
SC/ST : 33

உடல் கூறு தகுதி (Physical fitness) :
உயரம் (ஆண்) : 170 செ.மீ
உயரம் (பெண்) : 159 செ.மீ
ஆண்கள் 1500 மீட்டர் நீளத்தை 7 நிமிடத்தில் ஓடி கடக்க வேண்டும்
பெண்கள் 400 மீட்டர் நீளத்தை 2 நிமிடம் 30 வினாடிகளில் ஓடி கடக்க வேண்டும்

தேர்விற்க்கு விண்ணப்பிக்க :
http://tnusrbonline.org/ இணையதளத்தில் “”RECRUITMENT FOR THE POST OF SUB-INSPECTOR OF POLICE”” பகுதியில் “APPLICATION FORM” கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் ரூ.500

தேர்வை பற்றி :
இது இரண்டரை மணி நேரம் நடக்கும் தேர்வு, மொத்த மதிப்பெண் 70, குறைந்தது 25 மதிப்பெண் எடுக்க வேண்டும் .

இந்த தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது.

பகுதி 1 : இதில் பொது அறிவு (General Knowledge) சம்மந்தப்பட்ட கேள்விகள் இருக்கும்

பகுதி 2 : இதில் பகுத்தறிவு (- Logical Analysis, Numerical Analysis, Psychology Test, Communication Skills) சம்மந்தபட்ட கேள்விகள் கேட்க்கப்படும்

இரண்டு பகுதியிலும் MCQ வகையில் (சரியன விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறையில்) கேள்விகள் கேட்கப்படும்.

சேர்க்கை முறை :

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உடல் தகுதி தேர்விற்க்கு (Physical Efficiency Test) உட்படுத்தப்படுவார்கள், உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்முக தேர்வில் (Viva-Voce) கலந்து கொள்வார்கள், நேர்முக தேர்வில் தேர்சி பெறுபவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும். பள்ளி / கல்லூரியில் படிக்கும் போது NCC, NSS, Sports/Games சான்றிதழ் வைத்திருந்தால் கூடுதலாக 5 மதிப்பெண் வழங்கப்படும்.

இந்த தேர்வு பற்றிய முழு விபரங்கள் கீழ்காணும் லின்கில் உள்ளது
http://tnusrbonline.org/…/SI_TKARTSP_2019_Information…

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *