Latest:
ArticleGuidance Article

அரசு கல்வி உதவியும் அதை பெறுவதற்க்கான வழிமுறைகளும்

மத்திய மாநில அரசுகள் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்காக பல கோடி ரூபாய்களை ஒதுக்குகின்றது, இதை பெறுவது நம்முடைய உரிமை, அதன் வழிமுறைகளை அறிந்து கொண்டு பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் இதற்க்கு விண்ணப்பிக்க தயங்க வேண்டாம். மத்திய மாநில அரசுகள் வழங்கி வரும் கல்வி உதவி திட்டங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு நேரடியாக உதவி தொகை வழங்குவது, தேர்வுகள் நடத்தி அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குவது. முதலில் அரசு நேரடியாக வழங்கும் கல்வி உதவிகளை பார்க்கலாம்.

1. மத்திய அரசு சிறுபாண்மையினருக்கு வழங்கும் கல்வி உதவி தொகை :

பொருளாதாரத்தில் பின் தங்கிய (முஸ்லீம்கள் உட்பட) சிறுபாண்மை மாணவர்களுக்கு Pre-matric, Post-matric, மற்றும் MERIT CUM MEANS ஆகிய மூன்று விதமான கல்வி உதவித் திட்டத்தை மத்திய அரசு வழங்கி வருகின்றது. முஸ்லீம்களில் பெரும்பாலோனோர் விண்ணப்பிக்கும் கல்வி உதவி தொகை இது, அதன் விபரங்களை பார்க்கலாம்.

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இந்த உதவித் தொகை கிடைக்காது. அரசு ஒரு குறிபிட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் கல்வி உதவித் வழங்கும், இது போன்ற உதவிகளில் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களுக்கும், பெற்றோரின் ஆண்டு வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த கல்வி உதவி பற்றிய பொதுவான தகவல் :

• மாணவர்கள் 50 % – க்கு மேல் மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.

• ஒரு குடும்பத்தில் 2 மாணவர்களுக்கு மேல் உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது.

• இந்த கல்வி உதவித் தொகை பெறுபவர்கள் மற்ற எந்த கல்வி உதவிக்கும் விண்ணப்பிக்க கூடாது.

• ஒரு முறை கல்வி உதவி வழங்கப்பட்டால் “Renewal” முறையில் படிப்பு முடியும் வரை விண்ணபித்து கல்வி உதவித் தொகை பெறலாம்.

• மாணவரின் வருகை பதிவேடு (attendance) கணக்கில் கொள்ளப்படும், வருகை பதிவேடு குறைவாக உள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும்.

• தொடர்ந்து 50 % – க்கு மேல் மதிப்பெண் எடுக்காவிட்டால் உதவித் தொகை நிறுத்தப்படும்

விண்ணப்பிக்கும் முறை :

மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவி இணையதளத்தில் http://www.scholarships.gov.in விண்ணப்பிக்க வேண்டும் மாணவர்கள் விண்ணப்பித்த பிறகு கல்லூரி/பள்ளி நிர்வாகம் மாணவர்களின் விண்ணப்பத்தை அதே இணையதளத்தில் அங்கீகரிக்க வேண்டும் , பிறகு அரசின் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Pre-matric கல்வி உதவித் தொகை :

இந்த உதவி தொகை 1- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

விட்டிலிருந்து பள்ளியில் படிக்கும் 1-ஆம் வகுப்பு முதல் 5 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருடத்திற்க்கு ரூ.1000 வழங்கப்படுகின்றது. 6-ஆம் வகுப்பு முதல் 10 – ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருடத்திற்க்கு ரூ.5000 வழங்கப்படுகின்றது. ஹாஸ்டலில் தங்கி படிக்கும் 6-ஆம் வகுப்பு முதல் 10 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருடத்திற்க்கு ரூ.10000 வழங்கப்படுகின்றது.

Post-matric கல்வி உதவித் தொகை :

இந்த உதவித் தொகை சான்றிதழ் படிப்பு (ITI), டிப்ளோமா, இளநிலை பட்ட படிப்பு (UG), முதுகலை பட்ட படிப்பு (PG) மற்றும் Phd படிப்பு படிக்கும் மாணவர்களுக்காக வழங்கப்படுகின்றது.

படிப்பிற்க்கு ஏற்ப வருடத்திற்க்கு ரூ.7000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படுகின்றது

MERIT CUM MEANS கல்வி உதவி தொகை :

இந்த உதவித் தொகை பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. விட்டிலிருந்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வருடத்திற்க்கு ரூ.25,000 வழங்கப்படுகின்றது. ஹாஸ்டலில் தங்கி மாணவர்களுக்கு வருடத்திற்க்கு ரூ.30,000 வழங்கப்படுகின்றது.

2. மாநில அரசின் முதல் பட்டதாரி கல்வி உதவி :

மருத்தும் , பொறியியல், சட்டம் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த முதல் பட்டதாரி மாணவர்களுக்கு தமிழக அரசு அதிக பட்சமாக வருடத்திற்க்கு ரூ.20,000 வரை வழங்கி வருகின்றது. படிப்பு முடியும் வரை இந்த உதவி தொகை வழங்கப்படும். இதை பெற முதல் பட்டதாரி சான்றிதழ் பெற வேண்டும். ஏப்ரல் மாதத்திலேயே பெறுவது நல்லது.

மருத்தும் , பொறியியல், சட்ட படிப்பிற்க்கான கவுன்சிலிங்கிற்க்கு விண்ணப்பிக்கும் போதே முதல் பட்டதாரி சான்றிதழை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மருத்தும் , பொறியியல், சட்டம் அல்லாத பிற படிப்பு (B.A, B.Sc, B.Com, B.B.A etc..) படிக்கும் பிற்படுத்தப்பட்ட முதல் பட்டதாரி மாணவர்களுக்கு தமிழக அரசு கல்வி உதவி வழங்கி வருகின்றது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.50,000 – க்கு மிகாமல் இருக்க வேண்டும்.படிப்பிற்க்கு ஏற்ப வருடத்திற்க்கு ரூ.1200 முதல் ரூ.1500 வரை வழங்கப்படுகின்றது.

3. மாநில அரசின் பிற்படுத்தப்பட்டோருக்கான (முஸ்லீம்கள் உட்பட) கல்வி உதவி தொகை:

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல துறை சார்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய BC/MBC மாணவர்களுக்கு கல்வி உதவியை தமிழக அரசு வழங்கி வருகின்றது. தமிழகத்தில் முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வருவதால் இந்த கல்வி உதவிக்கு முஸ்லீம்களும் தகுதியானவர்கள்.

6 – அம் வகுப்பு முதல் Phd வரை இந்த கல்வி உதவி தொகை வழங்கப்படுகின்றது. அதிக பட்சமாக வருடத்திற்க்கு ரூ.10,000 வரை கல்வி உதவி வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமான ரூ.50,000 மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

மாணவர்கள் பள்ளி /கல்லூரி மூலமாகதான் இதற்க்கு விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி /கல்லூரிகளில் இதற்க்கான விண்ணப்பம் வழங்கப்படும், அதை பூர்த்தி செய்து பள்ளி /கல்லூரிகளில் சமர்பிக்க வேண்டும். பள்ளி /கல்லூரி நிர்வாகம் http://escholarship.tn.gov.in/scholarship.html இணையதளத்தில் தகவல்களை பதிவேற்றம் செய்து மாணவர்களுக்கு கல்வி உதவி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். ஒரு முறை கல்வி உதவி வழங்கப்பட்டால் “Renewal” முறையில் படிப்பு முடியும் வரை தொடர்ந்து கல்வி உதவி வழங்கப்படும்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள் :

• வருமான சான்றிதழ் (Income Certificate)

• சாதி சான்றிதழ் (community Certificate)

• ஆதார் எண்• இருப்பிட சான்றிதழ் (Residential Certificate)

• மாணவரின் வங்கி கணக்கு

கூடுதல் விபரங்கள் இந்த இணையதளங்களில் உள்ளது

http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm

http://escholarship.tn.gov.in/scholarship.html

4. மத்திய அரசின் 80 % மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி உதவி தொகை :

“CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIP FOR COLLEGE AND UNIVERSITY STUDENTS” என்ற கல்வி உதவி தொகையை மத்திய அரசு அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றதுஇள நிலை பட்ட படிப்பு (any UG course) , முதுகலை பட்ட படிப்பு (any PG course) படிப்பவர்கள் இந்த கல்வி உதவிக்கு தகுதியானவர்கள்.

மாணவர்கள் குறைந்தது 80% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும். 80 % குறைவாக மதிப்பெண் எடுத்தால் இதற்க்கு விண்ணப்பிக்க முடியாது. வருடத்திற்க்கு மொத்தம் 82, 000 மாணவர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படுகின்றது. இதில் 50% பெண்களுக்கு ஒதுக்கப்படும். இதில் 27% பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (முஸ்லீம்களையும் சேர்த்து) ஒதுக்கப்படும்.

பெற்றோரின் ஆண்டு வருமான ரூ.4,50,000 மிகாமல் இருக்க வேண்டும். இளநிலை பட்ட படிப்பு (UG course) படிப்பவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். முதுகலை பட்ட படிப்பு (PG course) படிப்பவர்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும். உதவி தொகை மாணவரின் வங்கி கணக்கிற்க்கு நேரடியாக செலுத்தப்படும். ஒரு முறை கல்வி உதவி பெற்றால் படிப்பு முடியும் வரை Renewal முறையில் தொடர்ந்து பெறலாம்.

அடுத்த அடுத்த ஆண்டுகளில் 60 % மேல் மதிப்பென் எடுக்க வேண்டும் , 75 % மேல் வருகை பதிவேடு (Attendance) இருக்க வேண்டும். குறைவாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் கல்வி உதவி தொகை நிறுத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

மாணவர்கள் கல்லூரி மூலமாகதான் இதற்க்கு விண்ணப்பிக்க வேண்டும. கல்லூரி நிர்வாகம் http://www.scholarships.gov.in இணையதளத்தில் தகவல்களை பதிவேற்றம் செய்து மாணவர்களுக்கு கல்வி உதவி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். மேலே குறிபிட்ட Post-Metric ஆவணங்களே இதற்க்கும் பொருந்தும்.

5. மாற்று திறனாளிகலுக்கான (ஊனமுற்றோர்) கல்வி உதவி தொகை :

மருத்துவம் , தொழில் நுட்ப கல்வி (பொறியியல்) பயிலும் மாற்று திறனாளி (ஊனமுற்றோர்) மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு கல்வி உதவி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டிற்க்கு 2500 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகின்றது. மாணவர்கள் குறைந்தது 50% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும். நேரடியாக மாணவரின் வங்கி கணக்கிற்க்கே கல்வி உதவி தொகை அனுப்பி வைக்கப்படும்.
படிப்பிற்க்கு ஏற்ப வருடத்திற்க்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகின்றது.

விண்ணப்பிக்கும் முறை :

மாணவர்கள் http://www.nhfdc.nic.in/scholarship.html இணையதளதில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். கீழ் காணும் ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

• மாற்று திறனாளி (ஊனமுற்றோர்) என்பதற்க்கான சான்று

• மதிப்பெண் சான்றிதழ் (Mark sheet)• வருமான சான்றிதழ் (Income Certificate)

• கல்வி கட்டண ரசீது (Fee Receipt )

• ஆதார் எண்

• மாணவரின் வங்கி கணக்கு

கூடுதல் விபரங்கள் இந்த இணையதளங்களில் உள்ளதுhttp://www.nhfdc.nic.in/scholarship.html

6. INSPIRE ஊக்கத்தொகை (INSPIRE Scholarship) :

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் அறிவியல் பாடப்பிரிவு படிக்கும் 10 ஆயிரம் மாணவர்களுக்கு வருடத்திற்க்கு ரூ.80,000 வரை ஊக்கத்தொகையை மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை வழங்கி வருகின்றது.

திறமையான மாணவர்களை அறிவியல் துறையின் பக்கம் ஈர்ப்பதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for inspired Research – INSPIRE) என்ற திட்டத்தின் கீழ் அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை (Scholarships for higher Education) வழங்கப்படுகிறது.

தகுதியான மாணவர்கள் :

1) கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், எர்த் சயின்சஸ் (Earth science) , லைஃப்சயின்சஸ் (Life science ) உள்பட அடிப்படை அறிவியல் பாடப்பிரிவுகளில் B.Sc, B.Sc (Hons.), ஒருங்கிணைந்த M.S அல்லது M.Sc. படிக்கும் மாணவர்கள்.

2) 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் (CBSE/State Board) முதல் ஒரு சதவீத இடங்களுக்குள் இருக்க வேண்டும்.

3) ஐ.ஐ.டி.களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பின் கீழ் அடிப்படை அறிவியல் பாடப்பிரிவு (Integrated M.Sc) படிக்கும் மாணவர்கள்.

4) தேசிய அளவிலான போட்டித் தேர்வு (COMPETATIVE EXAM) மூலம் பல்கலைக்கழகத்தில் அடிப்படை அறிவியல் பாடங்களில் இளநிலைப் பட்டம் அல்லது ஒருங்கிணைந்த படிப்பு (Integrated M.Sc) படிக்கும் மாணவர்கள்.

5) இந்திய இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச் (I.I.S.R) கல்வி நிறுவனங்கள், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச்(N.I.S.E.R.), அணுசக்தித் துறையின் சென்டர் ஃபார் பேசிக் சயின்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள்.

6) விண்ணப்பிக்கும் போது மாணவர்களுக்கு 17 – 22 வயதுக்குள் இருக்கவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்ப படிவத்தை http://www.inspire-dst.gov.in என்ற இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து பூர்த்தி செய்யவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் கீழ் காணும் ஆவணங்களையும் இணைத்து கீழே உள்ள முகவரிக்கு சாதாரண தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
“Director, National Institute of Science, Technology & Development Studies (NISTADS), Dr K.S. Krishnan Marg, New Delhi – 110 012”

குறிப்பு :

1. பட்டப் படிப்பு நிலையில் அடிப்படை அறிவியல் பாடப்பிரிவு படிக்கும் மாணவர்களுக்கே இந்த உதவி தொகை பொருந்தும் .

2. இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், அக்ரிகல்ச்சுரல் சயின்ஸ், எலெக்ட்ரானிக் சயின்ஸ், மெடிக்கல் மற்றும் பயோ – மெடிக்கல் சயின்ஸ் படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கமுடியாது.

இணைக்க வேண்டியஆவணங்கள்:

1) 10-ம் மற்றும் 12ம்வகுப்பு தேர்வுமதிப்பெண் சான்றிதழ் நகல் (SELF ATTESTED).

2) மாணவர் படித்து வரும் கல்லூரி முதல்வர், கல்வி நிறுவனத்தின் இயக்குநர் அல்லது பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் (Endorsement letter)கூடுதல் விபரங்கள் இந்த இணையதளங்களில் உள்ளதுhttp://www.inspire-dst.gov.in

***தேர்வுகள் மூலமாக பெறும் கல்வி உதவிகள்***

இதுவரை நேரடி கல்வி உதவி திட்டங்களை பார்த்தோம். இப்போது தேர்வுகள் நடத்தி அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அரசு தரும் கல்வி உதவிகளை பார்க்கலாம்.

மத்திய அரசு சில திறன் சார்ந்த தேர்வுகளை நடத்துகின்றது. இதில் தேர்சி பெறும் மாணவர்களுக்கு மாத மாதம் கல்வி உதவி வழங்கி வருகின்றது. கல்வி உதவி மாணவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் .

1. NTS தேர்வு:

மத்திய அரசால் நடத்தப்படும் இந்த தேர்வில் தேர்சி பெறும் மாணவர்களுக்கு கீழ் காணும் உதவி தொகை வழங்கப்படுகின்றது.

10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.500

11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1250 பட்ட படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படுகின்றது.

இந்த http://www.ncert.nic.in/pro…/talent_exam/index_talent.html இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விபரங்கள் கீழ் காணும் இணையதளங்களில் உள்ளது.

Educational entrance examination – Wikipedia

Microsoft Word – Scheme NMMS.doc (education.gov.in)

2. GATE தேர்வு :

இது B.E / B.Tech, M.Sc, MCA, படித்தவர்கள் மேற்படிப்பு படிக்க எழுதும் தேர்வாகும். இந்தியாவில் உள்ள IIT, NIT, டெல்லி பல்கலை கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள், அண்ணா பல்கலை கழகம் போன்ற மாநில அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில் M.E/M.Tech/M.Plan, Phd படிக்க GATE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது.

இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் . கல்லூரிக்கேற்ப அரசு மாதம் ரூ.8,000 முதல் ரூ.12,000 வரை வழங்குகின்றது. கல்வி உதவி மாணவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் .

விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதத்தில் IIT-யின் இணைய தளங்களில் (http://gate.iitm.ac.in/) கிடைக்கும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க முடியும்.

தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :

• B.E / B.Tech எல்ல பொறியியல் படிப்புகள் படித்து முடித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.

• AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்

• M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல்( இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதத்தில் IIT-யின் இணைய தளங்களில் (http://gate.iitm.ac.in/) கிடைக்கும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க முடியும்.

3. JRF-NET தேர்வு :

இது BE / B. Tech, B. Pharm, M.Sc படித்தவர்கள் Phd அல்லது ஒருங்கினைந்த Phd (integrated MS-Ph.D) படிப்பதற்க்கு எழுதும் தேர்வாகும்.

CSIR நடத்தும் இந்த NET தேர்வில் தேர்சி பெற்றால் மாத மாதம் ரூ.25,000 கல்வி உதவி தொகை வழங்கப்படும். 2 வருடத்திற்க்கு பிறகு மாணவரின் கல்வி திறனை மதிப்பிட்டு மாதம் ரூ.28,000 என படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.

அதிக பட்ச வயது 28, இந்த தேர்வு வருடத்திற்க்கு 2 முறை நடக்கும், இந்த http://cbsenet.nic.in இணையதளத்தில் தேர்விற்க்கு விண்ணப்பிக்க வேண்டும். JRF பற்றி கூடுதல் விபரங்கள் www.csirhrdg.res.in இணையதளத்தில் பெறலாம்.

குறிப்பு : தங்களுக்கு தெரிந்த இன்னும் கூடுதல் கல்வி உதவி விபரங்கள் இருந்தால் Comment-ல் தெரியபடுத்துங்கள் கட்டுரையில் சேர்த்து கொள்கின்றேன்.

2 thoughts on “அரசு கல்வி உதவியும் அதை பெறுவதற்க்கான வழிமுறைகளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *