துணை மருத்துவ பட்ட படிப்புகள் (Paramedical degree courses) & PHARM. D படிக்க தற்போது விண்ணப்பிக்கலாம்
🎓 துணை மருத்துவ பட்ட படிப்புகள் (Paramedical degree courses) & PHARM. D படிக்க தற்போது விண்ணப்பிக்கலாம்!
✅ நீட் (NEET) மதிப்பெண் தேவை இல்லை
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களில் துணை மருத்துவ படிப்புகள் (Paramedical courses) படிக்க நீட் (NEET) மதிப்பெண் தேவை இல்லை, +2-ல் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. மாணவர்கள் இதற்கு தற்போது விண்ணப்பிக்கலாம்.
👉 விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 21 (21-06-2024)
🎯 துணை மருத்துவ பட்ட படிப்பு (Para-medical degree Courses) :
கீழ்காணும் 19 துணை மருத்து பட்ட படிப்புகள் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்படுகின்றது. இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.500
- B.PHARM
- B.P.T. (Physiotherapy)
- B.ASLP
- B.Sc. (NURSING)
- B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGY
- B.Sc. RADIO THERAPY TECHNOLOGY
- B.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGY
- B.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGY
- B.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGY
- B.Sc. CARDIAC TECHNOLOGY
- B.Sc. CRITICAL CARE TECHNOLOGY
- B.Sc. DIALYSIS TECHNOLOGY
- B.Sc. PHYSICIAN ASSISTANT
- B.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGY
- B.Sc. RESPIRATORY THERAPY
- B.OPTOM (Optometry)
- B.O.T (Occupational Therapy)
- B.Sc. NEURO ELECTRO PHYSIOLOGY
- B.Sc. CLINICAL NUTRITION
👉 மேலே குறிப்பிட்ட 19 படிப்புகளும் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ளது.
👉 தனியார் கல்வி நிறுவனங்களில் B.PHARM, B.SC.(NURSING),BPT (physiotherapy), B.O.T (occupational therapy) ஆகிய படிப்புகளுக்கு மட்டுமே இந்த கலந்தாய்வின் (counselling) மூலம் சேர முடியும்.
அரசு மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணம் வருடத்திற்கு ரூ.3,000 மட்டுமே, அரசு ஒதுக்கீட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி கட்டணம் வருடத்திற்கு ரூ.33,000 முதல் ரூ.45,000 வரை இருக்கும்.
🎯 PHARM. D : இது 6 ஆண்டு படிப்பு, இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000. இந்த படிப்பு அரசு மருத்துவ கல்லூரிகளில் கிடையாது, 31 தனியார் மருத்துவ கல்லூரிகளில் மட்டுமே உள்ளது, எனவே இந்த படிப்பிற்கான ஆண்டு கட்டணம் ரூ.2 லட்சம் மற்றும் இதர கட்டணம்
🎓 கல்வி தகுதி :
12- ஆம் வகுப்பில் கீழ்காணும் பாட பிரிவை தேர்ந்தெடுத்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
a) இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) மற்றும் உயிரியல் (Biology)
b) இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) மற்றும் தாவரவியல் (Botany), விலங்கியல் (Zoology)
c) B.Pharm., B.ASLP, B. Optom. படிப்புகளுக்கு மட்டும் இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), கணிதம் (Mathematics) படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
குறைந்தது 40 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்
வயது வரம்பு : 17 முதல் 30 வயது வரை
👉 ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://reg24.tnmedicalonline.co.in/pmc/
🎯 கூடுதல் விபரங்களுக்கு:
👉 துணை மருத்துவ பட்ட படிப்புகள் (PARAMEDICALDEGREE COURSES) : https://tnmedicalselection.net/news/23052024013949.pdf
👉 PHARM. D : https://tnmedicalselection.net/news/23052024013907.pdf
துணை மருத்துவ படிப்புகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள நமது விஸ்டம் வழிகாட்டி சேனலில் உள்ள இந்த https://www.youtube.com/watch?v=_J1DyXLXBk8 விளக்க வீடியோவை பார்க்கவும்.
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி https://www.facebook.com/wisdomkalvi பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.
✍️ ஆக்கம் : S.சித்தீக் M.Tech