Latest:
EventsPrograms

ராயப்பேட்டையில் “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” நிகழ்ச்சி!

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹோபார்ட் அரசு முஸ்லீம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று செவ்வாய் கிழமை (13-02-2024) நடைபெற்ற “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” நிகழ்ச்சி!

முஸ்லீம் பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் 1873-ஆம் ஆண்டு மிர் ஹுமாயுன் ஷா பகதூர் அவர்களால் இந்த பள்ளிக்கூடம் உருவாக்கப்பட்டது.

1875-ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஹோபார்ட் அவர்களின் இறப்பை அடுத்து பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த பள்ளிக்கு ஹோபார்ட் என்று பெயர் வைத்தது.

இந்திய கல்வி வரலாற்றில் இஸ்லாமியர்களின் பெரும் பங்களிப்பை உலகிற்கு எடுத்து சொல்லும் வரலாற்று பொக்கிஷமாக இன்றும் செயல்பட்டு வருகின்றது சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹோபார்ட் அரசு முஸ்லீம் பெண்கள் மேல்நிலை பள்ளி.

வரவிருக்கும் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் வழிமுறைகள், எளிதில் பாடங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளும் Memory Techniques வழிமுறைகளை விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S.சித்தீக் M.Tech அவர்கள் மாணவர்களுக்கு விரிவாக விளக்கினார்.

பள்ளியின் PTA நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.