Latest:
ArticleEventsPrograms

சென்னை மதரஸாயே ஆஸம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?”

250 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை மதரஸாயே ஆஸம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று வியாழக் கிழமை (8/02/2024) காலை 10:30 மணிக்கு நடைபெற்ற நடைபெற்ற “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” – பொதுத் தேர்வு பயிற்சி முகாம்!

வரவிருக்கும் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் வழிமுறைகள், எளிதில் பாடங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளும் Memory Techniques வழிமுறைகளை விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S.சித்தீக் M.Tech அவர்கள் மாணவர்களுக்கு விரிவாக விளக்கினார்.

1761-ஆம் ஆண்டு சென்னையில் உருவாக்கப்பட்ட கல்வி கூடம் இது. பழமை வாய்ந்த சென்னை பல்கலை கழகமே 1857-ஆம் ஆண்டு தான் துவக்கப்பட்டது. சென்னை பல்கலை கழகம் உருவாவதற்கு 96 ஆண்டுகளுக்கு முன் உருவான கல்வி நிலையம் இது. அப்போது உலக கல்வி மார்க்க கல்வி என்ற பிரிவினை எல்லாம் இல்லை. மதரஸா கல்வி என்பது அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது, அனைவருக்குமானதாக இருந்தது.

இந்திய கல்வி வரலாற்றில் இஸ்லாமியர்களின் பெரும் பங்களிப்பை உலகிற்கு எடுத்து சொல்லும் வரலாற்று பொக்கிஷமாக இன்றும் செயல்பட்டு வருகின்றது சென்னை மவுன்ட் ரோட்டில் உள்ள மதரஸாயே ஆஸம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி

பள்ளி நிர்வாக கமிட்டி (School Management Committee) நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.