தேர்வில் அதிக மதிப்பெண் பெற சில ஆலோசனைகள்!
அரசு நடத்தும் 10th, 12th பொதுத் தேர்வுகள், NEET, JEE, CUET போன்ற நுழைவு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ, மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் அரசு பொது தேர்வுகளிலும், நுழைவு தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் விரும்பும் படிப்பை குறைவான செலவில் படித்து நல்ல வேலைக்கு செல்வதற்கு வசதியாக இருக்கும்.
இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய கல்வி அறிவை மதிப்பிட பயன்படுத்தபடுகின்றது. இது தான் இன்றைய எதார்த்த நிலை என்பதை மாணவர்கள் உணர்ந்து அதிகமாக மதிப்பெண் எடுக்க முயற்சி செய்யயுங்கள்.
அதிக மதிப்பெண் எடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள் :
அதிக மதிப்பெண் எடுப்பதினால் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். நல்ல கல்லூரிகளில் படிபதன் மூலம் நமக்கு நல்ல கல்வி கிடைக்கின்றது, கல்வி உதவியும் எளிதில் கிடைக்கும், நல்ல தரமான கல்வியினால் நமக்கு எளிதில் வேலை கிடைக்கும் வாய்ப்பும் அதிகமாகும். எனவே மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க முயற்சி செய்யயுங்கள்.
அதிக மதிப்பெண் எடுக்க என்ன செய்ய வேண்டும் :
நம் அனைவருக்கும் எவ்வளவோ கனவுகள், லட்சியங்கள் இருக்கும், நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நம்முடைய கனவு நிறைவேற வேண்டும் என்றால் நமக்கு நம்பிக்கையும், ஆர்வமும், கடின உழைப்பும் இருக்க வேண்டும்.
நம்பிக்கை :
முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்துகொள்ள வேண்டும் (Increase your confident level). இதற்க்கு தடையாக இருப்பது உங்களை பற்றிய உங்களுடைய எண்ணம். நம்மால் 100/100 மதிப்பெண் எப்படி எடுக்க முடியும் ? என்ற எதிர்மறை சிந்தனை தான் (negative thoughts) உங்கள் வெற்றியை முதலில் தடுகின்றது. உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடாதீர்கள், நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள்.
ஆர்வம் :
எந்த ஒன்றில் வெற்றி பெறுவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம், ஈடுபாடு இருக்க வேண்டும். படிக்கும் போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும் போது “கடினமான பாடம்” என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது, பொதுவாக ”கடினமான பாடம்” என்று எதுவும் இல்லை, நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் Centum (100%) எடுக்கின்றனர். விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.
மறதி : மாணவர்களுக்கு பொதுவாக உள்ள குறை மறதி, நன்றாக படித்தேன் ஆனால் தேர்வறைக்கு சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது, என பல மாணவர்கள் கூறுவார்கள். பொதுவாக இதை மறதி என்று கூற முடியாது, நம்முடைய ஆர்வமின்மையை இது காட்டுகின்றது. சினிமா படல் மறப்பதில்லை, ஆனால் படிக்கும் பாடம் மறக்கின்றது, சினிமா பாடல் கேட்க்கும் போது கவனத்துடன் கேட்கின்றனர், கவனமாக பாடல் கேட்க்கும் போதே பாடல் வரிகளை மனனம் செய்கின்றனர். ஆனால் பாடம் படிக்கும் போது பல மாணவர்கள் பாட்டு கேட்டுக்கொண்டு படிப்பது, ,டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது,இப்படி கவனமில்லாமல் படிக்கின்றனர். இதானால் நமது கவனம் சிதறடிக்கப்பட்டு நாம் படிப்பது முழுமையா நமது நினைவில் பதிவதில்லை, அல்லது தேர்வு வரைக்கும் நினைவில் நிற்ப்பதில்லை.
மறதியை போக்க : கவனமாக படியுங்கள், படிக்கும் போது யாரிடமும் பேசாதீர்கள், பாட்டு கேட்க்காதீர்கள், டிவி பார்க்காதீர்கள் இரவு படிப்பை (Night study) தவிர்த்துவிடுங்கள், அதிகாலையில் படியுங்கள். படித்தை எழுதி பாருங்கள்.
நாம் நமக்காக படிக்கின்றோம் : நாம் ஏன் படிக்கின்றோம் என்பதை முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டும். ஆசிரியர் சொல்வதற்க்காகவோ அல்லது பெற்றோர்கள் சொல்வதற்க்காகவோ படித்தல் நிச்சயம் மறக்கத்தான் செய்யும், நீங்கள் படிப்பது உங்களுக்காக படிக்கின்றீர்கள், நீங்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கையை சிரமமானதாக்கிவிடும், இதில் ஆசிரியருக்கோ, பெற்றோருக்கோ எந்த நஷ்டமும் இல்லை. எனவே நான் படிப்பது என்னுடைய நலனுக்காதான் என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர்ந்து, நல்ல வேலையில் சேர்ந்தால் அது உங்களுக்குத்தான் பயனுல்லதாக அமையும்.
சினிமா பாட்டு கேட்க்கும் போது உள்ள கவனம் படிப்பதில் குறைவாக உள்ளது, கிரிக்கெட் விளையாட்டில் உள்ள கவனம் படிப்பில் இல்லாமல் போகின்றது, நம்முடைய நேரத்தை நம்மை மேம்படுத்தி கொள்ள பயன்படுத்த வேண்டும். சினிமா பார்ப்பதினாலும், கிரிக்கெட் பார்ப்பதினாலும், நடிகர்களும், கிரிக்கெட் விளையாடுபவர்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர், நீங்கள் செலவிடும் உங்கள் பொன்னான நேரத்தின் மூலம் அவர்கள் சம்பாதிக்கின்றனர், மாணவர்கள் படிப்பை கோட்டை விட்டு வேலை தேடுவதே வேலையாக அலைகின்றனர். இதை மாற்ற உங்கள் நேரத்தை உங்களுக்காக செலவளியுங்கள் (படியுங்கள்)
கடின உழைப்பு / கடும் முயற்சி :
- அதிக நேரம் : அதிக நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய முயற்சி செய்யுங்கள், படிக்கும் காலத்தில் வீண் விளையாட்டு, நண்பர்களுடன் வீண் பேச்சு என்றும், ஊர் சுற்றுவது என்றும் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனத்தை செலுத்துங்கள், நமது படிப்பில் இலக்கை நிர்னையித்து அதை அடைய தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், பள்ளி கூடம் சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர்கள் சரியில்லை எனவே நான் நன்றாக படிக்க முடியவில்லை என்று அடுத்தவர்களை குறை சொல்லி நம் வாழ்க்கையை வீணாக்க கூடாது, நாம் எந்த பள்ளியில் படித்தாலும் கவனமாக உழைத்து படித்தால் எளிதில் நல்ல மதிப்பெண் எடுக்க முடியும்.
- எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதைவிட எப்படி படிக்கின்றோம் என்பது தான் முக்கியம். ஒரு பாடத்தை படிக்கும் போது அந்த பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும் எப்படி கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை (Confident) வந்த பிறகே அடுத்த பாடத்திற்க்கு செல்ல வேண்டும்.
- படிப்பதை தள்ளிபோடாதீர்கள் : படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுங்கள், பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதை தள்ளி போடாதீர்கள், இப்படி தள்ளி போட்டுக்கொண்டே போனால் தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும், நம் வாழ்க்கையும் வீணாகிவிடும், எப்போது சுறுசுறுப்பாக (Active -ஆக) இருங்கள். அன்றாட பாடத்தை அன்றைக்கே படித்துவிடுங்கள்.
தேர்வு எழுதும் முன் :
தேர்விற்க்கு முன்னதாக நாம் பாடங்களை படிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய சில நடைமுறைகளை பார்ப்போம்
1. படிக்கும் முறை : பொதுவாக நாம் தேர்விற்க்காக படிக்கும் போது வெறுமனே புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்க்காது, படிக்கும் போது வெள்ளை தாள், பேனா அல்லது பென்சில் வைத்து கொண்டு, படிக்கும் ஒவ்வொறு பக்கத்தையும் எழுதி பார்க்க வேண்டும், ஒரு பக்கமோ அல்லது ஒரு பகுதியோ (chapter) படித்து முடித்த பிறகு உடனே அடுத்த பகுதிக்கு போகாமல் இதுவரை படித்ததை கண்டிப்பாக பார்க்காமல் எழுதி பார்க்க வேண்டும், இப்படி செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.
2. திட்டமிடுதல் : எந்த ஒன்றும் திட்டமிடுதல் இல்லாமல் செய்தால் சரியான பலன் கிடைக்காது. தேர்வுக்கு படிப்பதற்க்கு முன்னால் நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும் (Time table- போட்டு படிக்க வேண்டும்). ஒரு நாளில் குறைந்தது 12 மணி நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய முயற்சி செய்யுங்கள். இதில் நாம் 10 மணி நேரத்திற்க்கு தான் படிபதற்க்காக செலவு செய்ய வேண்டும். மீதமுள்ள இரண்டு மணி நேரத்தில் படித்ததை மீண்டும் நினைவில் நிருத்த செலவலிக்க (Revise-பன்ன) வேண்டும். அதே போல் நாம் படிக்கும் ஒவ்வொறு மணி நேரத்திலும் 10 நிமிடங்களை படித்ததை நினைவில் நிருத்த (Revise பன்ன) செலவு செய்ய வேண்டும்.
3. சுயபரிசோதனை (Check list) : ஒரு நாளில் எந்த எந்த நேரத்தில் என்ன என்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்ட மிட்ட பிறகு, தினமும் நாம் தூங்க போகும் முன் இன்று நாம் திட்ட மிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என சுய பரிசோதனை செய்ய (Check – பன்ன) வேண்டும். இதை தினமும் செய்தால் தான் ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு படித்துள்ளோம் இன்னும் எவ்வளவு படிக்க வேண்டி உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். திட்டமிடும் போது (Time table- போடும் போது) வாரத்தில் 6 நாள்களுக்குதான் நாம் படிப்பதற்க்கு திட்ட மிட வேண்டும். மீதமுள்ள ஒரு நாளில் அந்த வாரத்தில் நாம் படிக்காமல் விட்ட பாடங்களை படிக்க ஒதுக்க வேண்டும்.
- தேர்விற்க்கு ஓரிரு வாரம் இருக்கும் போதே புதிதாக படிப்பதை நிறுத்தி விடுங்கள், புதிதாக எதையும் படிக்காமல் இது வரை படித்ததை நினைவில் நிருத்துவதற்க்கு (revise பன்ன) முயற்சி செய்யுங்கள். எனவே நாம் திட்ட மிடும் போது (Time table- போடும் போது) தேர்விற்க்கு ஓரிரு வாரத்திற்க்குள் எல்லா பாடத்தையும் படித்து முடித்து விடும் படியாக திட்ட மிடவேண்டும்.
- படிக்கும் போதே முக்கியமான சமன்பாடுகள், சூத்திரங்களை தனியாக எழுதிவைத்துகொள்ளளுங்கள், பின்னர் நாம் பாடத்தை revise -பன்னுவதற்க்கு இது எளிதாக இருக்கும்.
- படிக்கும் போது பாட்டு கேட்பது, டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது போன்றவற்றை கண்டிப்பாக தவிற்த்துவிடுங்கள். பாடத்தில் கவனத்தை செலுத்தி படிக்க முயற்சி செய்யுங்கள்.
- தேர்விற்க்கு முந்தய நாளே பேனா, பென்சில், இரப்பர், இன்னும் தேவையான அனைத்தையும் வாங்கி வைத்து கொள்ளளுங்கள். தேர்வு எழுத செல்லும்முன் எல்லவற்றையும் நாம் எடுத்து வைத்துவிட்டோமா என சோதனை செய்துவிட்டு செல்லலுங்கள்.
தேர்வு எழுதும் போது :
தேர்வு எழுத பள்ளிக்கு சென்றவுடன் நேராக தேர்வறைக்கு சென்றுவிடவும், நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம், நாம் படிக்காத கேள்விகளை பற்றி நம்மிடன் அவர்கள் விவாதித்தால் அது நம்மை பலகீன படுத்தகூடும். தேர்வு எழுத முக்கியமான தேவையே நமது நம்பிக்கையாகும் (Confident), நம்பிக்கை இழந்துவிட்டோம் என்றால் தெரிந்த கேள்வியாக இருந்தாலும் கோட்டைவிட்டுவிடுவோம், எனவே நமது நம்பிக்கையை பலகீனபடுத்த கூடிய எந்த விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.
- தேர்வறைக்கு நுழைந்த உடன் உங்கள் சட்டை பை, பேண்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்து கொள்ளுங்கள், தேவையில்லாத பேப்பர்களை தூக்கி எறிந்து விடுங்கள், தேர்வு எழுதும் நார்காலியின் மீது ஏதாவது எழுதிருந்தால் அழித்து விடுங்கள், அழிக்க முடியவில்லை எனில் தேர்வு கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.
- கேள்விதாள் வந்ததும் கேள்விகளை கவனமாக படிக்கவும், தெரியாத கேள்விகள் முதலில் வந்தால் மனம் தளர்ந்துவிட வேண்டாம் (Don’t lose your confident). தொடர்ந்து கேள்விதாளை படிக்கவும் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் கேள்விதாளை கவனமாக படிக்கவும்.
- நன்றாக தெரிந்த கேள்விகளை முதலில் எழுதுங்கள், பிறகு ஓரளவிற்க்கு தெரிந்த கேள்விகளை எழுதுங்கள், இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு உங்களுக்கு தெரிந்த பதிலை எழுதுங்கள், தவறாக இருக்குமோ என அச்சம் வேண்டாம், எந்த கேள்வியையும் விடாமல் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுத முயற்சி செய்யுங்கள்.
- பக்கம் பக்கமாக பதில் எழுதாமல், குறிப்பு குறிப்பாக எழுதுங்கள்(Points points-ஆக எழுதுங்கள்), முக்கியமான வரிகளை அடிகோடிடுங்கள், சமன்பாடுகளையும்.
- சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் (Formulas and equations) கட்டத்திற்க்குள் எழுதுங்கள், வரைபடத்தின் மூலமும், அட்டவணை மூலமும் பதிலை விளக்குங்கள்.
- பொதுவாக முதலில் எழுதும் கேள்விகள் அதிக நேரம் பிடிக்கும், எனவே முதல் மூன்று கேள்விகளை நேரத்தை பார்த்து குறுகிய நேரத்தில் எழுத முயற்சி செய்யுங்கள்.
- ஒவ்வொறு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்க்குள் என்ன எழுத முடியுமோ அதை எழுதுங்கள், ஒரு கேள்விக்கான நேரம் முடிந்ததும் உடனே அடுத்த கேள்விக்கு சென்றுவிடுங்கள், ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிகொண்டு இருக்க வேண்டாம்.
- விடைதாளை அளிக்கும் முன் கேள்வி எண்ணையும் பதில் எண்ணையும் சரிபார்த்துகொள்ளுங்கள்.
- புதிய பேனாவை வைத்து எழுத வேண்டாம், வேகம் கிடைக்காது, நீங்கள் எழுதி பழகிய பேனாவின் மூலமே எழுதுங்கள்.
- எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதிய பிறகு நேரம் இருந்தால் விடைதாளை அலகு படுத்தும் வேலையை செய்யுங்கள்.
தேர்வு எழுதி முடித்தபிறகு :
தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்க்கு செல்லவும் நண்பர்களுடன் வினா, விடை பற்றி விவாதிக்க வேண்டாம். நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளை சுட்டிகாட்டி நமக்கு மன உலைச்சலை ஏற்படுத்திவிடுவார்கள், இது நம்மை கவலையில் ஆழ்த்திவிடும். இது நாம் அடுத்த தேர்வுக்கு ஆயத்தமாவதை பாதிக்கும், நாம் என்னதான் வருத்தப்பட்டாலும் கவலைபட்டாலும் திரும்பி அந்த தேர்வை எழுதமுடியாது, எனவே தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்க்கு சென்று அடுத்த தேர்விற்க்கு படிக்க தயாராகுங்கள்.
பெற்றோர்களே!
மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. மேலே குறிப்பிட்ட நடைமுறைகளை தங்களுடைய பிள்ளைகள் செயல்படுத்துகிறார்களா என்பதை பெற்றோர்கள்தான் உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் மாணவர்கள் வயது குறைந்தவர்கள், பெற்றோர்கள்தான் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். எனவே பெற்றோர்கள் மேற்சொன்ன வழிமுறைகளை படித்து அதை தங்களுடைய பிள்ளைகளுக்கு தினமும் சொல்லி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும், தங்களுடைய பிள்ளைகள் சரியா படிக்கிறார்களா என கண்கானிக்க வேண்டும். படித்ததை உங்களிடம் பார்க்காமல் எழுதி காண்பிக்க சொல்ல வேண்டும், படிப்பை தவிற மற்றதின் பக்கம் திரும்பிவிடாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
- டிவி பார்ப்பதை தவிற்க்கவும், நீங்கள் டிவி பார்க்காமல் இருந்தால்தான் உங்கள் பிள்ளைகளும் டிவி பார்க்காமல் இருப்பார்கள் கேபிள் இணைப்பை கட்டாயம் துண்டித்துவிடவும்.
- தேர்வு முடியும் வரை மாணவ மாணவிகள் செல்போன் பயன்படுத்திவதை கட்டுபடுத்தவும். படிக்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் செல்போனை வாங்கி வைத்துகொள்ளுங்கள்.
- வீண் விளையாட்டுகள் விளையாட அனுமதிக்காதீர்கள், கணினியில் (Computer -ல்) படிப்பதற்க்கு தவிற வேரெதற்க்கும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். கம்ப்யூட்டர் / செல்போனில் பாட்டு கேட்பது, சினிமா பார்பது, கேம் விளையாடுவது போன்றவற்றிக்கு முழுமயாக தடை போடுங்கள்.
- பிள்ளைகளுக்கு நல்ல சத்துள்ள உணவை கொடுக்கவும், பிள்ளைகளை திட்ட வேண்டாம் சபிக்க வேண்டாம், அன்பாக அவர்களுடைய தவறை சுட்டிகாட்டவும்,
- பிள்ளைகளை வெறுமனே படி படி என்பதைவிட படிப்பதற்க்கான சூழ்நிலையை ஏற்படுத்திகொடுங்கள். படிப்பதை கண்கானியுங்கள். அதிகமாக மதிப்பெண் எடுத்தால் பரிசு தருவதாக சொல்லுங்கள்.
- மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால், நீங்கள்தான் அதிகமாக பணத்தை கொடுத்து கல்லூரியில் சேர்க்க வேண்டும். உங்கள் பிள்ளை நல்ல மதிப்பெண் எடுத்தால் மிக குறைவான பணத்தில் கல்லூரியில் சேர்க்கலாம். எனவே உங்கள் பிள்ளை அதிக மதிப்பெண் எடுப்பது உங்களுக்குத்தான் மிக முக்கியம். ஏனெனில் கல்வி கட்டணம் கட்டுவது நீங்கள்தான். அதை கவனத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.
- உங்கள்வீட்டு பொருளாதார சூழ்நிலையையும், கல்வியின் அவசியத்தையும் தொடர்ந்து வழியுறுத்துங்கள். தேர்வுகாலம் முடியும் வரை உங்களுடைய முழுகவனத்தையும் உங்கள் பிள்ளைகளின் மீது வையுங்கள்.
All the best!
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி https://www.facebook.com/wisdomkalvi பக்கத்தை Like செய்யுங்கள்
விஸ்டம் கல்வி வழிகாட்டி YouTube சேனலை https://www.youtube.com/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்
விஸ்டம் கல்வி வழிகாட்டி Twitter பக்கத்தை www.twitter.com/wisdomkalvi follow செய்யுங்கள்
ஆக்கம் : S.சித்தீக் M.Tech
Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி
www.youtube.com/wisdomkalvi
www.facebook.com/wisdomkalvi
www.wisdomkalvi.com
www.twitter.com/wisdomkalvi
www.t.me/wisdomkalvi
www.instagram.com/wisdom_kalvi