Latest:
ArticleEducation NewsGuidance Article

பள்ளி / கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி ?

வாழ்வில் நம் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவது கல்வி, எனவே கல்வி கற்க பள்ளிக்கூடங்களையும் (Schools), கல்லூரிகளையும் (Colleges) தேர்வு செய்வதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்கள் சொல்கின்றார்கள், உறவினர்கள் சொல்கின்றார்கள் என்று பள்ளி கூடத்தையோ, கல்லூரியையோ தேர்வு செய்ய வேண்டாம். உங்களுடைய சூழலுக்கு ஏற்ற சிறந்த பள்ளியை அல்லது கல்லூரியை தேர்வு செய்யுங்கள்.

பள்ளிக்கூடங்களை (Schools) தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டியவை :

  1. ஒழுக்க கட்டுப்பாடுகள் (Discipline)
  2. கற்பிக்கும் முறைகள் (Teaching Mechanism)
  3. கண்காணிப்பு (Continuous Monitoring)
  4. ஆங்கிலம் மற்றும் தொடர்பு திறன் வளர்ப்பு (English and Communication Skill development)
  5. அறிவுசார் போட்டிகள் (Educational Competitions and exhibitions)
  6. கற்பிக்க தேவையான கட்டமைப்பு (Teaching Infrastructure)
  7. கல்வி கட்டணம் (Fee)

கல்லூரிகளை (Colleges) தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டியவை :

  1. ஒழுக்க கட்டுப்பாடுகள் (Discipline)
  2. ஆங்கிலம் மற்றும் தொடர்பு திறன் வளர்ப்பு (English and Communication and Soft skill development)
  3. படிப்பு சார்ந்த தொழில்நுட்ப பயிற்சி (Technical skill development)
  4. வேலைவாய்ப்பிற்கு Campus Interview, Placement Cell
  5. தொழில் நிறுவனங்களில் பயிற்சி (Internship in relevant company)
  6. அறிவுசார் போட்டிகள் (Technical Competitions)
  7. கல்வி கட்டணம் (Fee)

இந்த தகவல்களை யாரிடம் விசாரிப்பது ?

ஏற்கனவே அங்கு படித்த அல்லது தற்போது படித்து கொண்டு இருக்கின்ற மாணவர்களிடம் விசாரியுங்கள், ஒரு 5 மாணவர்களிடமாவது மேலே குறிபிட்ட அம்சங்களை பற்றி விசாரித்து முடிவெடுங்கள்.

தேர்வு செய்யும் போது உங்களுடைய சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் :

உங்களுடைய பொருளாதார சூழல், மாணவ, மாணவியரின் கல்வி திறன், தங்கி படிப்பதா ? அல்லது சென்று வந்து படிப்பதா ? (hostel or day scholar ) என்பதை அடிப்படையாக வைத்து ஒரு 5 பள்ளிகளையோ அல்லது கல்லூரிகளையோ தேர்வு செய்யுங்கள்.

பின்னர் மேலே குறிப்பிட்ட அம்சங்கள் அந்த பள்ளி / கல்லூரியில் இருக்கின்றதா என்பதை விசாரித்து, பட்டியலில் உள்ள 5-ல் ஒன்றை தேர்வு செய்யுங்கள். எல்லா அம்சங்களும் கொண்ட பள்ளிகள் / கல்லூரிகள் கிடைப்பது கடினம், எனவே விசாரித்த வகையில் ஓரளவிற்கு பரவா இல்லை என்ற நிலை தான் பெரும்பாலும் இருக்கும். அதில் ஏதாவது ஒன்றை தான் தேர்வு செய்யும் சூழல் உள்ளது.

குறிப்பு : படிப்பதற்கு பணம் அவசியம் இல்லை, மிக மிக குறைவான பொருளாதாரத்தில் படித்து சிறந்த கல்வியையும், வேலைவாய்ப்பையும் பெற முடியும் என்பதை பல ஆண்டுகளாக சொல்லி வருகின்றேன். அந்த அடிப்படையில் பள்ளி கல்விக்கோ (School Education), கல்லூரி படிப்பிற்கு (College Education) லட்ச கணக்கில் பணம் செலவு செய்வதை நான் பரிந்துரை செய்வதில்லை.

ஆக்கம் : S. சித்தீக் M.Tech

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *