எது கடினம் ? உலகில் கடினம் என்று ஏதேனும் உள்ளதா ?
கடினம் என்று நாம் நினைக்கும் பல விஷயங்களில் பலர் சாதாரணமாக சாதித்து காட்டுகின்றனர். உதாரணத்திற்கு மாணவர்களால் கடினம் என கருதப்படும் கணித (Mathematics) பாடத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் 100 / 100 மதிப்பெண் எடுக்கின்றனர்.
கடினம், எளிது என்பதெல்லாம் நம்முடைய பார்வை தான். நம்முடைய உளவியல் தான். நம்முடைய ஆர்வமும், விருப்பமும் தான் “கடினம் / எளிது” என்ற தோற்றத்தை நமக்கு கொடுக்கின்றது.
முதன் முதலில் சைக்கிளோ, பைக்கோ ஓட்ட முயற்சிக்கும் போது அது நமக்கு கடினமாக இருந்திருக்கும், கீழே விழுந்து வாரி காயம் ஏற்பட்டிருக்கும். இவ்வளவு கடினமாக இருந்தும் தொடர் முயற்சியினால் இப்போது நாம் எளிதாக பைக் ஓட்டுகின்றோம்.
நாம் எதில் ஆர்வபடுகின்றோமோ அது நமக்கு எளிதாக இருக்கின்றது (உண்மையில் அது கடினமாக இருந்தாலும்)
நாமக்கு எதில் ஆர்வம் இல்லையோ அது நமக்கு கடினமாக தெரிகின்றது (உண்மையில் அது எளிதாக இருந்தாலும்)
நாம் கடினமாக கருதும் விஷயங்களின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி கொண்டால் அது நமக்கு மிக எளிதானதாக மாறிவிடும்.
மக்கள் கடினமாக நினைக்கும் விஷயங்களில் போட்டி குறைவாக இருக்கும். எனவே அதை தேர்ந்தெடுத்து கற்றுக் கொண்டால், பணியாற்றினால் எளிதில் அங்கு சாதிக்கலாம்.
மக்கள் “கடினம் / முடியாது / சாத்தியமே இல்லை” என்று கருத்திய விஷயங்களில் சாதித்து காட்டியவர்கள் தான் இன்று சாதனையாளார்களாக உலகில் வலம் வருகின்றனர்.
நீங்களும் சாதனையாளராக வேண்டும் என்றால் கடினமானதை தேர்ந்தெடுங்கள்
ஆக்கம் : S. சித்தீக் M.Tech