Latest:
Government ArticleGovernment Jobs

TNPSC குரூப் 4 தேர்விற்க்கு தயாராவது எப்படி ?

இந்த தேர்வில் 200 கேள்விகள் கேட்க்கப்படும், தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் 100 கேள்விகள், பிற பாடங்களில் 100 கேள்விகள்

ஒவ்வொறு கேள்விக்கும் 1.5 மதிப்பெண், மொத்தம் 300 மதிப்பெண், 230 மதிப்பெண்க்கு மேல் எடுத்தால் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது, இந்த தேர்வில் நெகடிவ் மதிப்பெண் கிடையாது (அதாவது தவறான விடைக்கு மதிப்பெண்னை குறைக்க மாட்டார்கள்)

கேள்விகள் அனைத்தும் Objective Type (சரியான விடையை தேர்ந்து எடுத்து எழுதும்) முறையில் இருக்கும், இந்த தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.

தமிழ் பாடம் அல்லது ஆங்கில பாடத்தில் ஏதாவது ஒரு பாடத்தில் இருக்கும் 100 கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும்

பாடதிட்டம் (Syllabus):

இந்த தேர்விற்க்கான பாட திட்டம் (Syllabus) கீழ்காணும் அறிவிப்பில் 24-ஆம் பக்கத்திலிருந்து 34-ஆம் பக்கம் வரை கொடுக்கப்பட்டுள்ளது.
http://www.tnpsc.gov.in/2019_19_ccse4-notfn-tamil.pdf

கேள்விகள் பாட பிரிவு வாரியாக (Subject wise Questions split):

மொத்தம் உள்ள 200 கேள்விகளும் பின் வருமாறு பாட பிரிவு வாரியாக பிரிக்கப்பட்டிருக்கும்

தமிழ் அல்லது ஆங்கிலம் (Tamil or English) : 100 கேள்விகள்
பொது அறிவியல் (General science ) : 16 முதல் 26 கேள்விகள்
நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) : 12 முதல் 20 கேள்விகள்
புவியியல் (Geography) : 5 முதல் 8 கேள்விகள்
பண்டைய வரலாறு (Ancient & Medieval history) : 5 முதல் 8 கேள்விகள்
நவீன வரலாறு மற்றும் இந்திய சுதந்திர போராட்டங்கள் (Modern history & Indian national movement) : 10 முதல் 12 கேள்விகள்
இந்திய ஆட்சி அமைப்பு (Indian Polity) : 10 முதல் 15 கேள்விகள்
இந்திய பொருளாதாரம் (Indian Economy): 5 முதல் 8 கேள்விகள்
கணிதம் மற்றும் திறனறிவு (Aptitude and Mental Ability Test) : 10 முதல் 15 கேள்விகள்

எந்த பாட பிரிவு எளிதாக இருக்கும் ?

மொத்தம் உள்ள 3 மணி நேரத்தில் யாராலும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடை எழுத முடியாது, எனவே நாம் எளிதான பாடங்களை முதலில் நன்றாக படித்து அந்த பகுதியில் முழு மதிப்பெண் எடுக்க முயற்சிக்க வேண்டும், கடினமான பகுதிகளை கூடுதல் கவனம் எடுத்து படித்து இயன்றவரை அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்.

எளிதான பாடங்களை பார்க்கலாம்

தமிழ் அல்லது ஆங்கிலம் 100 கேள்விகள், இதில் ஆங்கில பாடத்தில் கேட்க்கும் கேள்விகள் எளிதாக இருக்கும், எனவே ஆங்கிலம் நன்றாக தெரிந்த மாணவர்கள் ஆங்கிலத்தை தேர்ந்தெடுக்கலாம்.

பொது அறிவியலில், உயிரியல் (Biology) பிரிவு கேள்விகள் எளிதாக இருக்கும், இயற்பியல் பாடம் பிடித்தவர்களுக்கு இயற்பியல் (Physics) கேள்விகள் மிக எளிதாக இருக்கும்.

கணிதம் மிக மிக எளிதாக இருக்கும்

வரலாற்று பகுதியில், பண்டைய வரலாற்றை (Ancient & Medieval history) விட நவீன வரலாறு மற்றும் இந்திய சுதந்திர போராட்டங்கள் (Modern history & Indian national movement) சார்ந்த கேள்விகள் எளிதாக இருக்கும்

இந்திய ஆட்சி அமைப்பு (Indian Polity) மற்றும் இந்திய பொருளாதாரம் (Economy) கூடுதல் கவனம் எடுத்து படிக்க வேண்டும்.

என்ன புத்தகங்கள் படிக்கலாம் ?

6-வது முதல் 12-வகுப்பு வரை உள்ள தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாட புத்தங்களே போதுமானது, புத்தகத்தில் உள்ள அனைத்தையும் படிக்க வேண்டாம், TNPSC குரூப் 4 பாடதிட்டத்தில் (Syllabus) உள்ள பகுதியை மட்டும் படித்தால் போதும், உதாரணத்திற்க்கு வரலாறு பாட புத்தகத்தில் உலக வரலாறு மற்றும் இந்திய வரலாறு இருக்கும், TNPSC குரூப் 4 பாடதிட்டத்தில் இந்திய வரலாறு மட்டும் தான் இருக்கும், எனவே பாடதிட்டத்தில் (Syllabus) உள்ள பகுதியை மட்டும் படித்தால் போதும், அனைத்தையும் படித்து நேரத்தை வீணாக்க வேண்டாம்.

சமச்சீர் கல்வி பாட புத்தங்கள் கீழ் காணும் தமிழக அரசின் பாட நூல் கழக இணையதளத்தில் கிடைக்கும்,http://tnschools.gov.in/textbooks

நடப்பு நிகழ்வுகள் (Current affairs) பாட புத்தகத்தில் இருக்காது, தினம் தினம் செய்தி வாசிப்பவர்களுக்கு இந்த கேள்விகள் எளிதாக இருக்கும். கூடுதலாக படிக்க விரும்பினால் https://www.gktoday.in/ இணையதளத்தில் படிக்கலாம்.

இந்திய ஆட்சி அமைப்பு (Indian Polity) முழுமையாக பாட புத்தகத்தில் இருக்காது, கூடுதலாக படிக்க விரும்புவர்கள் , லஷ்சுமி காந்த் எழுதிய புத்தகத்தை படிக்கலாம் (Indian Polity by Lakshmi Kanth )

கடந்த ஆண்டு TNPSC குரூப் 4 கேள்விகள் மற்றும் விடைகள் :

TNPSC குரூப் 4 தேர்வு தொடர்ச்சியாக நடக்கும் தேர்வாகும், கடந்த ஆண்டுகளில் கேள்விதாள்களை பார்த்தால் இந்த தேர்விற்க்கு எப்படி படிக்க வேண்டும் ? என்னென்ன படிக்க வேண்டும் ? என உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

கீழ் காணும் லின்கில் கடந்த ஆண்டு கேள்விகள் மற்றும் அதற்க்கான பதில்கள் கிடைக்கும், அதையும் பார்த்து கொள்ளவும்
https://www.tnpscparamount.in/tnpsc-group-4-previous…/

இலவச ஆன்லைன் பயிற்சி :

யூடூபில் தமிழிலேயே TNPSC குரூப் 4 தேர்விற்க்கு பல பயிற்சி வீடியோக்கள் உள்ளன, அதன் மூலமும் இந்த தேர்விற்க்கு தயாராகலாம், உதாரணத்திற்க்கு https://www.youtube.com/…/UCYdb_QT4oG9r91mpSbKbQ_Q/videos யூடூப் சேனலை பாருங்கள்.

TNPSC குரூப் தேர்வை பற்றிய விபரம் நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த https://www.facebook.com/wisdomkalvi/posts/837503463289572/ லின்கில் உள்ளது

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *