ArticleEducation News

IES (Indian Engineering Service) தேர்வு

மத்திய அரசின் பாதுகாப்பு துறை , தொலை தொடர்பு துறை, மின் உற்பத்தி துறை, ரயில்வே துறை போன்ற பல்வேறு அரசு துறைகளில் பொறியியல் சார்ந்த அதி உயர் பதவிகளில் சேர UPSC ஆண்டு தோறும் IES (Indian Engineering Service) என்ற தேர்வை நடத்துகின்றது. இது மத்திய அரசு பணியில் IAS, IPS-க்கு இணையான தரத்தில் உள்ள தேர்வாகும். இதற்க்கு பொறியியல் (B.E / B.Tech) படித்த மாணவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 15 (15-10-2019)

விண்ணப்பிக்க :

UPSC-ன் https://www.upsconline.nic.in/mainmenu2.php இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், விண்ணப்ப கட்டணம் ரூ.200, தேர்வு ஜனவரி 5-ஆம் தேதி (5-01-2020) நடைபெறும், தமிழகத்தில் சென்னை, மதுரையில் தேர்வு நடைபெறும்.

வயது வரம்பு : 21-வது முதல் 30 வயது வரை

IES தேர்வை பற்றி :
தேர்வு கீழ்காணும் நான்கு பிரிவுகளில் நடைபெறும், மாணவர்கள் ஏதாவது ஒரு பிரிவில் விண்ணப்பிக்கலாம்.
1) Civil Engineering
2) Mechanical Engineering
3) Electrical Engineering
4) Electronics & Telecommunication Engineering

பொறியியலில் வேறு பிரிவு (other branch) படித்த மாணவர்கள், மேற்கண்ட 4 பிரிவுகளில் தாங்கள் படித்த பிரிவிற்க்கு நெருக்கமான ஒரு பிரிவை தேர்ந்தெடுக்கலாம்,

தேர்வு 3 கட்டங்களாக நடைபெறும்,
1. முதல் நிலை தேர்வு (Preliminary Exam)
2. இரண்டாம் நிலை தேர்வு (Main Exam)
3. நேர்முக தேர்வு (Personality Test)

தற்போது முதல் நிலை தேர்விற்க்கு விண்ணப்பிக்கலாம்

முதல் நிலை தேர்வு (Preliminary Exam) பற்றி :

இது இரண்டு தாள்களை (Two papers) கொண்டது, ஒரே நாளில் இரண்டு தேர்வையும் எழுத வேண்டும் , கேள்விகள் Objective Type (சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக) முறையில் இருக்கும்.

முதல் தாள் பொதுபாடம் மற்றும் அடிப்படை பொறியியல் (General Studies and Engineering Aptitude) சார்ந்த கேள்விகள் 200 மதிப்பெண்ணிற்க்கு கேட்க்கப்படும், 2 மணி நேரம் தேர்வு நடைபெறும்

இரண்டாம் தாளில் மாணவர் தேர்ந்தெடுத்த பொறியியல் பிரிவில் (Engineering subject) உள்ள பாட திட்டத்தில் இருந்து கேள்விகள் 300 மதிப்பெண்ணிற்க்கு கேட்க்கப்படும், 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்

IES தேர்வை பற்றிய விபரங்கள் இந்த https://www.upsc.gov.in/…/Notice-ESEP-2020-Engl_0.pdf ஃபைலில் உள்ளது

இந்த தேர்விற்க்கு விண்ணப்பிக்க சந்தேகம் இருந்தாலோ, அல்லது கூடுதல் விபரம் தேவைபட்டாலோ கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *