Latest:
ArticleEducation News

GATE தேர்வு

இந்தியாவில்உள்ள IIT, NIT, மத்திய கல்வி நிறுவனங்கள், அண்ணா பல்கலை கழகம், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில் M.E/M.Tech/M.Plan, Phd படிக்க GATE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது.

இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் (கல்லூரி மற்றும் படிப்பிற்க்கு ஏற்ப அரசு மாதம் ரூ.12,400 முதல் ரூ.25,000 வரை வழங்குகின்றது). இந்த தொகை மூலம் கல்வி கட்டணம், ஹாஸ்டல், உணவு, புத்தகம் என அனைத்து வகையான செலவுகளையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியும் இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய தேவைகளையும் நிறைவேற்றிகொள்ளலாம்.

இது மட்டும் இல்லை இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview) மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன.

இந்த நுழைவு தேர்வுகளை பற்றி அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் பெரும்பாலோன மாணவர்கள் இந்த தேர்வை எழுதுவதில்லை. உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்த தேர்வுகள் கடினமில்லை. கவனத்துடன் படித்தால் எந்த தேர்வையும் வெல்லலாம்.

GATE நுழைவு தேர்வை பற்றிய விபரம் :

இது முழுக்க முழுக்க ஆன்லைனில் நடக்கும் தேர்வாகும். தேர்வு எழுத 3 மணி நேரம் கொடுக்கப்படும். கணினியில் தேர்வு என்பதால் , தேர்ந்தெடுக்கும் முறை கேள்விகள் ( Multiple Choice Questions) மற்றும் எண்களில் பதில் அளிக்கும் முறை (Numerical Answer) கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 65 கேள்விகள் 100 மதிப்பெண்ணுக்கு கேட்க்கப்படும், தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கபடும் (Negative marking).

தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :

1. B.E/B.Tech (பொறியியல் படிப்பு) படித்து முடித்த மாணவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.
2. AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்
3. M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல் ( இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க முடியும். இந்த இணையதளத்தில் (https://appsgate.iitd.ac.in/) மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : செப்டம்பர் 24 (24-09-2019)
விண்ணப்ப கட்டணம் ரூ.1500

தேர்வு எழுதும் அனுமதி சீட்டை (Admid card) ஆன்லைனில் பெற்றுகொள்ளாம்.

தேர்வுகள் 2020 பிப்ரவரி 1,2,8,9 ஆகிய தேதிகளில் நடைபெறும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் இதில் ஏதாவது ஒரு நாளில் தேர்வு எழுதுவார்கள்.
2020 மார்ச் 16-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடபடும்.

GATE – தேர்வில் தேர்சி பெற்றிருந்தால் நாம் விரும்பும் கல்லூரி/ பல்கலை கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் அண்ணா பல்கலை கழகம் நடத்தும் TANCA கவுன்சிலிங் மூலம் விருப்பமான கல்லூரியில் சேரலாம்.

GATE-தேர்வை பற்றி கூடுதல் விபரம் தேவைபட்டால் கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *