10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?
10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.
1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (Certificate courses)
I. மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு :
மேல் நிலை படிப்பில் சேரும் முன் மாணவர்கள் அவர்களின் இலக்கை தேர்வு செய்து கொள்ளுங்கள். வருங்காலத்தில் என்ன பட்ட படிப்பு படிக்க வேண்டும், எந்த துறையில் வேலைக்கு சேர வேண்டும் என்பதை தீர்மானித்து அதற்க்கு ஏற்ற பிரிவை தேர்ந்தெடுங்கள். பொறியியல் படிக்க விரும்பும் மாணவர் அறிவியல் (pure science) பிரிவில் சேர்ந்தால் +2 விற்க்கு பிறகு பொறியியல் படிக்க முடியாது. எனவே எதிர்காலத்தில் படிக்க நினைக்கும் துறையை தீர்மானித்துவிட்டு அதற்க்கு ஏற்றார் போல் பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். பிரிவுகள் வாரியான துறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு (PCM Biology) : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு இது. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Pharm, Indian medicines etc…), சட்டம் (Law), ஆசிரியர் படிப்புகள், ஆராய்சி படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் மேற்படிப்பு படிக்கலாம். எதிர்காலத்தில் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இருந்தால் First Group எடுக்கலாம், ஏனெனில் பெரும்பாலான படிப்புகளுக்கு தகுதியாக இந்த பிரிவு இருக்கும், நீங்கள் விரும்பும் பட்ட படிப்பு படிக்க இந்த பிரிவு உதவியாக இருக்கும்.
அரசு துறை, தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைக்கு சேர்வதற்க்கு ஏற்ற பிரிவு. இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது. எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ள பிரிவு, எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும். குறிபிட்ட பள்ளிகளில் இந்த பிரிவு கிடைக்காவிட்டால், இந்த பிரிவு கிடைக்கும் பள்ளியில் சேருங்கள்.
2. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு (PCM Computer science) : பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது. மருத்துவ துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைக்கு சேர்வதற்க்கு ஏற்ற பிரிவு. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும். அதிக வேலைவாய்ப்புள்ள படிப்புகளில் சேர்வதற்க்கு ஏற்ற பிரிவுகளில் இதுவும் ஒன்று.
3. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு : Pure Science என சொல்லப்படும் இந்த பிரிவு மூலம் மருத்துவம் (MBBS, BDS, B.Pharm, Indian medicines etc…) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது. மருத்துவம் சார்ந்த துறைகள், ஆராய்ச்சி துறைகளில் வேலைவாய்ப்புள்ள படிப்புகளில் சேர்வதற்க்கு ஏற்ற பிரிவு.
4. வணிகவியல், கணக்குப்பதிவியல், பொருளாதாரவியல் (Commerce, Accountancy, Economics) பிரிவு : B.Com, CA (Charted accountant), M.Com படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, பொருளாதார, கணக்கியல் துறைகளில் வேலைக்கு சேர்வதற்க்கான படிப்புகள் படிக்க ஏற்ற பிரிவு.
5. வரலாறு, பொருளாதாரவியல் : எதிர்காலதில் B.A. M.A, சட்ட படிப்பு, மேலாண்மை படிப்பு போன்ற படிப்புகள் படிக்கலாம். பொருளாதார துறையில் வேலை வாய்ப்பு, மத்திய மாநில அரசு வேலைவாய்ப்பிற்க்கான தேர்வுகள் எழுதி வெற்றி பெற ஆர்வம் இருந்தால் இந்த பிரிவை தேர்ந்தெடுக்கலாம். ஆங்கில மொழி திறனை வளர்த்துகொண்டால் அலுவலக வேலை வாய்ப்பு பெற முடியும்.
6. Vocational குரூப் : தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் மற்றும் இதர படிப்புகள் அடங்கிய பிரிவு, Vocational குரூபில் உள்ள குறிபிட்ட சில பிரிவுகள் மூலம் பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. இதை விருப்ப பிரிவாக எடுத்துகொள்ளாதீர்கள், வேறு பிரிவு கிடைக்கவில்லை என்றால் இதில் சேருங்கள்.
II. பட்டய படிப்பு (Diploma) :
இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன.
தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil, plastic engineering etc… போன்ற துறைகள் பல்வேறு துறைகள் உள்ளன. டிப்ளோமா படித்து முடித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம். பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள் டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable). 12-ஆம் வகுப்பு முடித்து பொறியியல் (B.E) படிக்கவும், 10- ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்க வேண்டாம்.
டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது. டிப்ளமோ முடித்து பணியில் சேர்ந்து கொண்டு பகுதி நேர படிப்பாக பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம். பெரும்பாலான மருத்துவ துறை டிப்ளோமா படிப்புகள் +2 விற்க்கு பிறகே படிக்க இயலும். +2 விற்க்கு பிறகு டிப்ளோமா படிப்பு 2 ஆண்டுகள்.
III. சான்றிதழ் படிப்பு (Certificate courses):
மாணவர்களை பட்ட படிப்புவரை படிக்கவைய்யுங்கள். இது போன்ற சான்றிதழ் படிப்புகளில் சேர்த்து அவர்களின் படிப்பை நிருத்திவிடாதீர்கள். ஓர் ஆண்டிற்க்குள் சம்பாதித்துதான் ஆக வேண்டும் வேறு வழியே இல்லை என கருதுபவர்கள் இதை தேர்ந்தெடுக்கலாம். இது ஓராண்டு படிப்பு. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ITI-களில் பல்வேறு சான்றிதழ் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
சில தொழில் நுட்ப படிப்புகள் : Mechanic Refrigeration And Air- Conditioning, Footwear Maker, Plastic Mould Maker, Machine Operator (Plastics Recycling), Jewellery And Precious Metal Worker, Fitter, Turner, Machinist, Electrician, Welder etc…
இன்னும் மருத்துவம் சார்ந்த பல்வேறு படிப்புகள் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால் அதிக சம்பளம் கிடைக்காது.
10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு : (கோரிக்கை:- தயவு செய்து மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)
1. குறுகிய கால தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழக அரசு, மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து வருகின்றது.)
2. இராணுவத்தில் வேலை வாய்ப்பு
3. இரயில்வேயில் வேலை வாய்ப்பு
4. தமிழக அரசு துறையில் வேலை வாய்ப்பு
5. Date Entry வேலைகள்
6. சமுதாய கல்லூரிகள் (Society College) மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு.
மேல்படிப்பு சம்மந்தமாக கூடுதல் விளக்கம் பெற விரும்பும் மாணவர்கள் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்
ஆக்கம் : S.சித்தீக் M.Tech
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.