Latest:
Government JobsGovernment News

மத்திய காவல் பணியில் 54,953 காலி பணியிடங்கள்

மத்திய காவல் பணியில் 54,953 காலி பணியிடங்கள், விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 17 (17/09/18)

மத்திய அரசின் BSF, CISF, CRPF, NIA போன்ற பாதுகாப்பு படையில் Constable (GD) பணியில் 54, 953 காலி இடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப மத்திய அரசின் மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒரு தேர்வை நடத்துகின்றது.

தேர்வு எழுத தகுதி :

கல்வி தகுதி : 10-ஆம் வகுப்பு

வயது : 18 முதல் 23 வயது வரை பிற்படுத்தபட்டோருக்கு (OBC) 26, SC/ST-க்கு 28

தேர்வு கட்டணம் : ரூ.100

மாத சம்பளம் : ரூ. 21,700 முதல் ரூ.69,100 வரை

தமிழகத்தில் தேர்வு நடக்கும் இடங்கள் : சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி. (பாண்டிசேரியிலும் தேர்வு எழுதலாம்)

விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 17 (17/09/18)

தேர்விற்க்கு விண்ணப்பிக்க :

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://ssc.nic.in/Portal/Apply என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பக்கத்தில் “CONSTABLE-GD” என்ற tab-பை கிளிக் செய்து அந்த பக்கத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முன் https://ssc.nic.in/Registration/Home என்ற பக்கத்தில் உங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளவும்.

தேர்வை பற்றி:

இது முழுக்க கணிணி வழி தேர்வாகும் , ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத முடியும். கேள்விகள் தேர்ந்தெடுக்கும் முறை வகையில் ( Multiple Choice Questions) இருக்கும். 100 மதிப்பெண்ணிற்க்கு கேள்விகள் கேட்கப்படும். 90 நிமிடங்கள் தேர்வு நடக்கும்.

இந்த தேர்வு 4 பகுதிகளை கொண்டது.

1. பொது நுண்ணறிவு மற்றும் காரணமறிதல் (General Intelligence and Reasoning)

2. பொது அறிவு (General Knowledge and General Awareness)

3. அடிப்படை கணிதம் (Elementary Mathematics)

4. ஆங்கிலம்/ இந்தி

இந்த தேர்வில் தேர்சி பெற்ற பிறகு உடல் திறன் தேர்வு ( Physical Efficiency Test and Physical Standard Test) மற்றும் மருத்துவ அறிக்கை (Medical Examination) அடிப்படையில் பணி ஒதுக்கப்படும்.கூடுதல் விபரங்கள் கீழ் காணும் லின்கில் உள்ளது.

CONSTABLES-GD-EXAMINATION-2018-RECRUITMENT-NOTICE-dt25072018.pdf (sscsr.gov.in)

constable_eng_14082018.pdf (ssc.nic.in)

தேர்வுக்கு விண்ணப்பிக்க மற்றும் தேர்வை பற்றி சந்தேகம் இருந்தால் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *