Latest:
Government JobsGovernment News

மத்திய அரசு துறையில் உதவியாளர்கள் மற்றும் கிளர்க் பணிகளுக்கு (CHSL) 12-ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு துறையில் உதவியாளர்கள் மற்றும் கிளர்க் பணிகளுக்கு (CHSL) 12-ஆம் வகுப்பு படித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்

மாத சம்பளம் : ரூ.19,900 முதல் ரூ.81,000 வரை
வயது வரம்பு : 18 முதல் 27 வரை (இட ஒதுக்கீடு பிரிவினர்களுக்கு வயது வரம்பில் சலுகை உள்ளது)
கல்வி தகுதி : 12-ஆம் வகுப்பு படித்து இருக்க வேண்டும், டிப்ளோமா படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10-01- 2020 (10 ஜனவரி 2010)

ஆன்லைனில் விண்ணப்பிக்க:
https://ssc.nic.in/Portal/Apply இந்த இணையதளத்தில் CHSL என்ற பக்கத்தை கிளிக் செய்து தேவையான தகவல்களை அளித்து விண்ணப்பிக்க வேண்டும்விண்ணப்ப கட்டணம் ரூ.100 (ஆன்லைனில் செலுத்த வேண்டும்)

பணியில் சேரும் வழிமுறை :
இந்த பணிகளில் சேர மத்திய அரசின் SSC தேர்வு ஒன்றை நடத்துகின்றது , இந்த தேர்வு 3 கட்டங்களாக நடைபெறும் , மூன்று கட்ட தேர்வுகளிலும் தேர்சி பெறுபவர்களுக்கு பணி ஆனை வழங்கப்படும்

முதல் கட்ட தேர்வு (Tier-I):
இது ஒரு மணி நேரம் கணிணியில் நடக்கும் தேர்வு (Computer based exam), அனைத்து கேள்விகளும் “சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக என்ற முறையில் (objective type)” இருக்கும்

இரண்டாம் கட்ட தேர்வு (Tier-II):
முதல் கட்ட தேர்வில் தேர்சி பெற்றால் , இரண்டாம் கட்ட தேர்வை எழுதலாம், இது ஒரு எழுத்து தேர்வு (subjective type), ஒரு மணி நேரம் நடைபெறும்

மூன்றாம் கட்ட தேர்வு (Tier-III):
இரண்டாம் கட்ட தேர்வில் தேர்சி பெற்றால், மூன்றாம் கட்ட தேர்வை எழுதலாம் இது ஒரு திறன் சார்ந்த தேர்வு (Skill based exam), டைப் ரைடிங் திறன் (Type writing skill), கணிணி அறிவு ஆகியவை சோதிக்கப்படும் , இதில் தேர்சி பெறுபவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும்
தேர்வுகள் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை என முக்கிய நகரங்களில் நடைபெறும்

பாட திட்டம் (Syllabus) :

இந்த 3 கட்ட தேர்வுகளுக்கான பாட திட்டம் கீழ் காணும் லின்கில் உள்ளதுhttps://ssc.nic.in/…/UploadedF…/Notice_chsl_03122019.pdf

இந்த தேர்விற்க்கு விண்ணப்பிக்க சந்தேகம் இருந்தாலோ, அல்லது கூடுதல் விபரம் தேவைபட்டாலோ கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *