தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணியில் (POLICE CONSTABLES) சேர
தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணி (POLICE CONSTABLES) 8826 வேலை வாய்ப்புகள்
தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் (POLICE CONSTABLES), இரண்டாம் நிலை சிறை காவலர் (JAIL WARDERS), தீயணைப்பாளர் (FIREMEN) பணிகளில் சேர தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் (TNUSRB) தேர்வு ஒன்றை நடத்துகின்றது, அதற்க்கு இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 8 (8/04/2019)
மொத்த பணியிடம் : 8826 (இட ஒதுக்கீடு அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படும்)
மாத சம்பளம் : ரூ.18,200 முதல் ரூ.52,900 வரை
கல்வி தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தமிழை ஒரு பாடமாக 10-ஆம் வகுப்பில் படித்து இருக்க வேண்டும்
வயது வரம்பு :
பொது பிரிவு : 24
BC/BC (முஸ்லீம்) : 26
SC/ST : 29
உடல் கூறு தகுதி (Physical fitness) :
உயரம் (ஆண்) : 170 செ.மீ
உயரம் (பெண்) : 159 செ.மீ
ஆண்கள் 1500 மீட்டர் நீளத்தை 7 நிமிடத்தில் ஓடி கடக்க வேண்டும்
பெண்கள் 400 மீட்டர் நீளத்தை 2 நிமிடம் 30 வினாடிகளில் ஓடி கடக்க வேண்டும்
தேர்விற்க்கு விண்ணப்பிக்க :
http://tnusrbonline.org/ இணையதளத்தில் “GR.II POLICE CONSTABLES, GR.II JAIL WARDERS, FIREMEN” பகுதியில் “APPLICATION FORM” கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் ரூ.130
தேர்வை பற்றி :
இந்த எழுத்து தேர்வு 80 மதிப்பெண்ணுக்கு நடைபெறும், கேள்விகள் Objective type வகையில் (சரியன விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறையில்) இருக்கும், பொது அறிவு கேள்விகள் 50 மதிப்பெண்ணுக்கு கேட்க்கப்படும், உளவியல் (Mental ability) கேள்விகள் 30 மதிப்பெண்ணுக்கு கேட்க்கப்படும்.
சேர்க்கை முறை :
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உடல் தகுதி தேர்விற்க்கு உட்படுத்தப்படுவார்கள், உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும், போட்டிகள் 15 மதிப்பெண்ணுக்கு வைக்கப்படும் , இதில் தேர்சி பெறுபவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும், பள்ளியில் படிக்கும் போது NCC, NSS, Sports/Games சான்றிதழ் வைத்திருந்தால் கூடுதலாக 5 மதிப்பெண் வழங்கப்படும்.
இந்த தேர்வு பற்றிய முழு விபரங்கள் கீழ்காணும் இரண்டு லின்கில் உள்ளது
http://tnusrbonline.org/pdfs/CR19_Notification.pdf
http://tnusrbonline.org/pdfs/CR19_Brochure.pdf
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.