தமிழகத்தில் B.S.M.S (சித்தா), B.A.M.S (ஆயூர்வேத) , B.U.M.S (யுனானி) , B.H.M.S (ஹோமியோபதி) படிப்புகள் படிக்க
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் B.S.M.S (சித்தா), B.A.M.S (ஆயூர் வேத) , B.U.M.S (யுனானி) , B.H.M.S (ஹோமியோபதி) படிப்புகள் படிக்க அரசு கவுன்சிலிங் நடத்தி வருகின்றது, அதற்க்கு மாணவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 13- 09 – 2019
இந்த ஆண்டு முதல் இதற்க்கு நீட் மதிப்பெண் அவசியம், இந்த கவுன்சிலிங் சென்னையில் நடைபெறும்
கல்வி தகுதி :
+2 -ல் , இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), உயிரியல் (Biology) அல்லது விலங்கியல் (zoology) மற்றும் தாவரவியல் (Botany) படித்து, குறைந்தது 50 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்
நீட் (NEET 2019) தேர்வில் பொது பிரிவினர் 300 மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும், மற்ற இட ஒதுக்கீட்டு பிரிவினர்கள் 240 மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்
இந்த ஆண்டு மட்டும், நீட் தேர்வில் இதற்க்கும் குறைவான மதிப்பெண் எடுத்தவர்களும் விண்ணப்பிக்கலாம், இறுதியில் இடங்கள் காலியாக இருந்தால் கவுன்சிலிங்கில் அனுமதிக்கப்படுவார்கள்
சித்தா படிக்க 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்புகளில் தமிழ் மீடியம் படித்து இருக்க வேண்டும் அல்லது தமிழை ஒரு மொழி பாடமாக 10-வது வரை அல்லது 12-வரை படித்து இருக்க வேண்டும்.
யூனானி படிக்க 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்புகளில் உருது மீடியம் படித்து இருக்க வேண்டும், அல்லது உருதை ஒரு மொழி பாடமாக 10-வது வரை அல்லது 12-வரை படித்து இருக்க வேண்டும் அல்லது உருது தகுதி தேர்வில் தேர்சி பெற்று இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க :
அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்க்கான விண்ணப்பம் கீழ் காணும் லின்கில் உள்ளது
http://www.tnhealth.org/online…/notification/N19082100.pdf
தனியார் கல்லூரிகளில் management quota மூலம் சேர்வதற்க்கான விண்ணப்பம் கீழ் காணும் லின்கில் உள்ளது
http://www.tnhealth.org/online…/notification/N19082101.pdf
விண்ணப்பத்தை நகல் (பிரின்ட் அவுட்) எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து, ரூ.500 க்கு “The Director of Indian Medicine and Homoeopathy, Chennai-106” என்ற பெயரில் DD எடுத்து கீழ்காணும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்
THE SECRETARY, SELECTION COMMITTEE
DIRECTORATE OF INDIAN MEDICINE AND HOMOEOPATHY
ARIGNAR ANNA GOVT. HOSPITAL OF INDIAN MEDICINE CAMPUS,
ARUMBAKKAM, CHENNAI 600 106
இந்திய மருத்துவபடிப்புகள் சேர்க்கை பற்றி கூடுதல் விபரம் தேவைபட்டால் கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.