Latest:
ArticleGuidance Article

சிறுபாண்மை மாணவிகளுக்கு வழங்கப்படும் மவ்லானா ஆசாத் கல்வி உதவி தொகை

சிறுபாண்மை மாணவிகளுக்கு வழங்கப்படும் மவ்லானா ஆசாத் கல்வி உதவி தொகை, விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 15 (15- 09- 2018)

9 முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபாண்மை (இஸ்லாமியர், கிருத்துவர், சீக்கியர்,பவுத்தர், பார்சி) மாணவிகளுக்கு மத்திய அரசு வருடம் தோரும் கல்வி உதவி தொகை வழங்கி வருகின்றது.

9-ஆம், 10-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வருடம் ரூ.5,00011-ஆம், 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வருடம் ரூ.6,000

விண்ணப்பிக்கும் முறை :

1. https://scholarship-maef.org/generalInst.jsp என்ற இணையதளத்தில் மாணவிகளின் விபரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

2. விண்ணப்பித்த படிவத்தை நகல் ( பிரின்ட் அவுட் ) எடுத்து செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் மாணவிகள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் வாங்கி, தேவையான ஆவணங்களை இணைத்து கீழ் காணும் முகவரிக்கு செப்டம்பர் 30-க்குள் அனுப்ப வேண்டும்.

The Secretary & CEO, Maulana Azad Education Foundation, Maulana Azad Campus,Chelmsford Road, Opposite New Delhi Railway station, (Paharganj side), New Delhi – 110055

தேவையான ஆவணங்கள் :

1. வருமான வரி சான்றிதழ் : தாசில்தாரிடமோ, அல்லது e-சேவை மையத்திலோ வருமான வரி சான்றிதழ் பெறவேண்டும், வருமான வரி சான்றிதழ் ஆங்கிலத்தில் இருந்தால் நல்லது, தமிழில் இருந்தால் வருமான வரி சான்றிதழை ஆங்கிலத்தில் மொழிபெயற்த்து உங்களின் கையொப்பமிட வேண்டும். வருட வருமானம் ரூ.1,00,000 -க்கு குறைவாக இருக்க வேண்டும்.

2. பள்ளி தலைமை ஆசிரியரால் கையொப்பமிட பட்ட விண்ணப்பம். (Application must be attested by HM/Principle of current school).

3. ஆதார் கார்டு

4. சாதி சான்றிதழ் (Attested by HM/Principle of current school)

5. மாணவியின் வங்கி கணக்கு விபரம் (Attested by HM/Principle of current school)

6. புகைப்படம் மற்றும் மாணவியின் விபரங்கள் தலைமை ஆசிரியரால் சான்றழிக்கப்பட்டு இருக்க வேண்டும். (Photo and Student Verification must be attested by HM/Principle of current school)

7. பள்ளியில் இருந்து பெறப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் மற்றும் வருகை பதிவேடு சான்றிதழ். (Attested by HM/Principle of current school)

இந்த கல்வி தொகைக்கு விண்ணப்பிக்க சந்தேகம் இருந்தாலோ, அல்லது கூடுதல் விபரம் தேவைபட்டாலோ கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்

– Wisdom – கல்வி வழிகாட்டி
https://www.facebook.com/wisdomkalvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *