குறைவாக மதிப்பெண் எடுத்தவர்கள் என்ன படிக்கலாம் ?
மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பை படிப்பதற்க்கு பெரிதும் உதவியாக இருப்பது அவர்கள் எடுக்கும் மதிப்பெண் தான். எதிர்பார்த்த அளவிற்க்கு மதிப்பெண் கிடைக்கவில்லை என்பது பெரும்பாலான மாணவர்களின் மன வருத்தம். +2-ல் 300 மதிப்பெண் எடுத்து பாஸ் ஆகிவிட்டோமே என சந்தோசப்படும் மாணவர்களும் இருக்கின்றார்கள், 520 மதிப்பெண் எடுத்து 550 மதிப்பெண் கிடைக்க வில்லையே என வருத்தப்படும் மாணவர்களும் இருக்கின்றார்கள்.
எனவே “குறைவான மதிப்பெண்” என்பது நம்முடைய எதிர்பார்ப்பை பொருத்தது, மாணவர்களே நீங்கள் எதை குறைவாக மதிப்பெண் என நினைக்கின்றீர்களோ அதை மிக அதிக மதிப்பெண்னாக நினைக்கும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள், குறைவு என்பது நீங்கள் நினைத்தைவிட குறைவு தானே தவிர, உண்மையில் அது குறைவான மதிப்பெண்னே அல்ல.
எனவே எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என வருத்தபட வேண்டாம். இறைவன் எதை நமக்கு வழங்கினானோ அதுவே சிறந்தது. போனது போகட்டும் இனிமேலாவது நன்றாக படிக்க வேண்டும் என முடிவெடுங்கள், கடந்தகால தவறுகளை நீக்கி, படிப்பில் ஆர்வம் காட்டி, கடினமாக உழைத்து படியுங்கள். நிச்சயம் நீங்கள் எடுத்த மதிப்பெண்னிற்க்கு ஏதாவது ஒரு கல்லூரியில் ஏதாவது ஒரு படிப்பில் இடம் கிடைக்கும், எந்த இளநிலை (UG) டிகிரி படிப்பிற்க்கும் முதுகலை (PG) படிப்பு இருக்கும் நீங்கள் இளநிலை (UG) படிப்பில் நன்றாக படித்தால் நீங்கள் விரும்பும் முதுகலை (PG) படிப்பை புகழ் பெற்ற கல்லூரிகளில் படிக்க முடியும், எனவே இது இறுதி அல்ல, வாய்ப்பு இன்னும் உள்ளது என்பதை மறவாதீர்கள்.
குறைவான மதிப்பெண் எடுப்பதினால் ஏற்படும் இடர்பாடுகளை எவ்வாறு வெல்வது ?
குறைவான மதிப்பெண் எடுப்பதினால் வரும் முதல் பாதிப்பு நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்காது, பரவாஇல்லை, கிடைக்கும் கல்லூரியில் பிடித்த படிப்பை தேர்ந்தெடுங்கள், உதாரணத்திற்க்கு B.Com படிக்க விரும்பி இருப்பீர்கள், நல்ல கல்லூரியில் B.Com இடம் கிடைக்க 1000 மதிப்பெண்னுக்கு மேல் இருக்க வேண்டும், நீங்கள் 350 மதிப்பெண் எடுத்து இருந்தால் ஏதாவது அரசு கல்லூரியில் கலை முயற்சி செய்து பாருங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. பொறியியல் படிப்பை அண்ணா பல்கலை கழகத்தில் படிக்க விரும்பி இருப்பீர்கள், மதிப்பெண் குறைவாக எடுத்தால் வீட்டிற்க்கு அருகில் உள்ள தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படியுங்கள்.
தரமில்லாத கல்லூரியில் படித்தால் நன்றாக படிக்கமுடியாதே என்ன செய்வது ?
தரமில்லாத கல்லூரியில் படித்தால் பாடங்கள் நன்றாக பயிற்றுவிக்கப்படாது. ஆனால் பாடங்களை கற்பதற்க்கு கல்லூரிகள் மட்டும் இடம் இல்லை, நீங்கள் எந்த பாடம் படித்தாலும் அதை சார்ந்த சிறந்த வகுப்புகள் இணைய தளங்களில் இலவசமாக (வீடியோ வடிவில்) கிடைக்கின்றன. அதை பார்த்து சிறந்த முறையில் படிக்கலாம். உதாரணத்திற்க்கு உலகின் தலை சிறந்த பொறியியல் கல்வி நிறுவனமான அமெரிக்காவில் உள்ள MIT-யின் வகுப்பு பாடங்கள் ஆன்லைனில் இலவசமாக கிடைக்கின்றன. நீங்கள் ஏதாவது சாதாரண கல்லூரியில் பொறியியல் படித்துகொண்டு MIT-யின் வகுப்பு பாடங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்து உலகின் தலை சிறந்த கல்வியை இலவசமாக கற்கலாம்.
எனவே மதிப்பெண் குறைவாக எடுத்தால் நீங்கள் விரும்பிய படிப்பு எந்த கல்லூரியில் கிடைக்கும் என தேடி பார்த்து அது கல்வி தரம் குறைவான கல்லூரியாக இருந்தாலும் சேர்ந்து படியுங்கள், உங்களின் கல்வி தரத்தை நீங்கள் சொந்த முயற்சி (self study) மூலம் உயர்த்திகொள்ளுங்கள்.
குறைவாக மதிப்பெண் எடுத்தவர்கள் என்ன என்ன படிக்கலாம் ?
குறைவாக மதிப்பெண்ணை கொண்டே உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்று எளிதில் வேலைவாய்ப்பை பெறும் வழிமுறைகள் மற்றும் அதற்க்கான படிப்புகள் இந்த வீடியோவில் உள்ளது https://www.youtube.com/watch?v=4zbaXWu5-kw
இதை பார்த்து என்ன படிக்கலாம் என முடிவு செய்துகொள்ளுங்கள்
மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்டோமே படித்தால் நமக்கு வேலை கிடைக்குமா ? என்ற சந்தேகம் வேண்டாம். எப்படி படித்தால் வேலை கிடைக்கும் என்பதற்க்கான விளக்கம் இந்த வீடியோவில் உள்ளது,
https://www.youtube.com/watch?v=xiUsOg1tWOw&t=45s
ஆக்கம் : S.சித்தீக் M.Tech
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.