Latest:
ArticleEducation News

குறைந்த செலவில் M.E / M.Tech/ MBA / MCA / M.Arch / M.Plan படிக்க TANCET தேர்வு

அண்ணா பல்கலை கழகம் அறிவித்த AUCET தேர்வை ரத்து செய்து கடந்த காலங்களை போலவே TANCET தேர்வை நடத்த முன் வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள், அண்ணால் பல்கலை கழக கல்லூரிகள், அரசு உதவி பெரும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் M.E/ M.Tech/ MBA/ MCA/M.Arch./ M.Plan படிக்க அண்ணா பல்கலை கழகம் வருடம் தோறும் TANCET என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இந்த தேர்வை எழுதி, நல்ல மதிப்பெண் எடுப்பதின் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் M.E/ M.Tech/ MBA/ MCA/M.Arch./ M.Plan படிக்கலாம் .

இந்த தேர்விற்க்கு https://www.annauniv.edu/tancet2019/ இணையதளத்தில் மே 8-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க கடைசி தேதி : மே 25விண்ணப்ப கட்டணம் ரூ.500

MBA/ MCA நுழைவு தேர்வு ஜூன் 22-ஆம் தேதியும், M.E. /M.Tech. /M.Arch. / M.Plan நுழைவு தேர்வு ஜூன் 23-ஆம் தேதியும் நடைபெறும்.

M.E/M.Tech படிக்க தகுதிகள் : B.E/B.Tech படித்தவர்கள், A.I.M.E, B.Pharm படித்தவர்கள். M.Sc. (physics/chemistry/Maths/Geography/Geology/Electronics etc….) படித்தவர்கள். இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

MBA படிக்க தகுதிகள் : ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள், இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

MCA படிக்க தகுதிகள் : ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள். (+2 – ல் கணித பிரிவில் படித்து இருக்க வேண்டும், அல்லது பட்ட படிப்பில் கணிதம் அல்லது புள்ளியியல் படித்து இருக்க வேண்டும்). இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

M.Arch/M.Plan படிக்க தகுதிகள் : B.Arch அல்லது B.Plan படித்து இருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

TANCET தேர்வை பற்றிய விபரங்கள் :

இது 2 மணி நேரம் நடக்கும் தேர்வு , இந்த தேர்வு 3 பகுதிகளை கொண்டது, முதல் பகுதி கணிதம், இரண்டாம் பகுதி அடிப்படை பொறியில் மற்றும் அறிவியல், மூன்றாம் பகுதி இளநிலை படிப்பில் மாணவர் தேர்ந்தெடுத்த பாட பிரிவு

TANCET தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அண்ணா பல்கலை கழகம் நடத்தும் TANCA கவுன்சிலிங் மூலம் விருப்பமான கல்லூரியில் M.E/ M.Tech/ MBA/ MCA/M.Arch./ M.Plan சேரலாம்.

இந்த தேர்வு பற்றிய விபரங்கள் https://www.annauniv.edu/tancet2019/ இணையதளத்தில் லின்கில் கிடைக்கும்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *