Latest:
ArticleEducation News

இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத்தில் (Indian Statistical Institute) படிக்க

புள்ளியியல் துறை (Statistical Studies) படிப்புகளில் இந்தியாவிலேயே முதன்மை கல்வி நிறுவனமாக இருப்பது இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம் (Indian Statistical Institute)

இது மத்திய அரசின் புள்ளியியல் (MOSPI) துறையின் கீழ் நடத்தப்படும் கல்வி நிறுவனமாகும் . இந்தியாவில், சென்னை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி, ஹைதாராபாத் உள்ளிட்ட சில நகரங்களில் இந்த கல்வி நிறுவனம் உள்ளது.

அதிக சம்பளத்தில் அதிக வேலைவாய்ப்புள்ள படிப்புகளில் ஒன்று B.Stat (Bachelor of statistics), M.Stat (Master of statistics), இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத்தில் (Indian Statistical Institute) பயிற்றுவிக்கப்படும் புள்ளியியல் சார்ந்த படிப்புகள் உலக தரம் வாய்ந்தவை, வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களான Data Analytics, Machine Learning, artificial intelligence (செயற்க்கை நுண் அறிவு) போன்ற துறைகளில் பணியாற்ற இந்த படிப்புகள் உதவும். பொருளாதாரம், நிர்வாக மேலாண்மை துறையிலும் இந்த படிப்புகளுக்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளன.

இளநிலை (UG) கல்வியில் B.Stat (Hons), B.Math (Hons) படிப்புகளும், முதுகலை (PG) கல்வியில் M.Stat, M.Math, M.S, M.Tech படிப்புகளும் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.

இந்த கல்வி நிறுவனத்தில் சேர நுழைவு தேர்வு நடத்தப்படுகின்றது. அதற்க்கு தற்போது விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 12 தேர்வு கட்டணம் ரூ.1250

கல்வி தகுதி :
B.Stat (Hons), B.Math (Hons) படிக்க +2 -வில் புள்ளியியலை (Statistics) ஒரு பாடமாக படித்து இருக்க வேண்டும்

M.Stat, M.Math, M.S, M.Tech படிக்க B.Sc இல் புள்ளியியலை (Statistics) ஒரு பாடமாக படித்து இருக்க வேண்டும். B.E, B.Tech படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். B.E, B.Tech – ல் புள்ளியியலை (Statistics) ஒரு பாடமாக படித்து இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க :
https://www.isical.ac.in/~admission/ – இந்த இணையதளத்திற்க்கு சென்று மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நுழைவு தேர்வை பற்றி :
இது இரண்டு தாள்களை கொண்டது , முதல் தாளில் Objective Type கேள்விகள் (சரியன விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறையில்) கேட்கப்படும்.

இரண்டாவது தாளில், கேள்விக்கு எழுத்தில் பதில் எழுதும் முறையில் (Written exam) எழுதும் வகையில் இருக்கும், கேள்விகள் கணிதம் மற்றும் புள்ளியியல் (Mathematics bad statistics) சார்ந்து இருக்கும். தேர்வின் முழு பாடதிட்டம் மற்றும் மாதிரி கேள்விகள் இந்த https://www.isical.ac.in/~admission/Syllabus-And-QP.html லின்கில் உள்ளது

சேர்க்கை முறை (Admission procedure) :
தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள், நேர்முக தேர்விற்க்கு (Interview) அழைக்கப்பட்டு இடம் ஒதுக்கப்படும்.

B.Stat, M.Stat படிப்பு பற்றியும், அதற்க்கான நுழைவு தேர்வு பற்றியும் முழு விபரங்கள் இந்த https://www.isical.ac.in/~admission/ லின்கில் உள்ளது.

கூடுதல் விபரம் தேவை படுபவர்கள் கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *