Latest:
ArticleGuidance Article

ஆன்லைன் பொறியியல் (Engineering) கவுன்சிலிங் மூலம் பொறியியல் படிப்பில் (B.E/B.Tech) சேர்வது எப்படி ?

கடந்த ஆண்டில் இருந்து தமிழகத்தில் பொறியியல் கவுன்சிலிங் ஆன்லைன் (இணையதளம்) மூலம் மட்டுமே நடத்தபடுகின்றது, இதன் மூலம் நாம் வீட்டில் இருந்தே நமக்கு விருப்பமான கல்லூரி/ பிரிவுகளை தேர்வு செய்ய முடியும். சென்னை வர வேண்டிய அவசியம் இல்லை. விளையாட்டு பிரிவு, மாற்று திறனாளிகள் பிரிவு போன்ற சிறப்பு பிரிவுகளுக்கு மட்டும் ஆன்லைன் கவுன்சிலிங் இல்லை, இவர்கள் சென்னை அண்ணா பல்கலை கழகத்திற்க்கு வந்து நேரடியாக கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும் .

பொறியியல் சேர்க்கைக்கான நடைமுறை மூன்று கட்டங்களாக உள்ளது, முதலில் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், இரண்டாவதாக சான்றிதழ் சரிபார்ப்பு TFC (TNEA facilitation centers) எனப்படும் உதவி மைய்யங்களில் நடைபெறும், அதன் பின்னர் RANK பட்டியல் வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடைபெறும், தற்போது RANK பட்டியல் வெளியிடப்பட்டு கவுன்சிலிங் துவங்க உள்ளது. எப்படி ஆன்லைன் மூலம் பொறியியல் படிப்பில் இடம் தேர்வு செய்வது என்பதை பார்ப்போம்.

மாணவர்களின் Rank-கை பொருத்து பொறியியல் கவுன்சிலிங் 5 பிரிவுகளாக நடைபெறும், நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள் முதல் பிரிவிலும், அடுத்து அடுத்து மதிப்பெண் எடுத்தவர்கள் அடுத்த அடுத்த பிரிவிலும் வருவார்கள், விண்ணப்பித்த எல்லா மாணவர்களுக்கும், ஆன்லைன் மூலம் கல்லூரி /பிரிவை தேர்வு செய்ய குறிபிட்ட தேதி ஒதுக்கப்பட்டு இருக்கும், (மொத்தம் 3 நாள்கள் ஒதுக்கப்பட்டிருக்கும்) இந்த மூன்று நாள்களில் http://tneaonline.in/ இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் User name மற்றும் பாஸ்வேர்ட் மூலம் Log-in செய்ய வேண்டும். முதலில் முன்பண தொகை ரூ.5000 கட்ட வேண்டும் (சலுகை உள்ளவர்கள் ரூ.1000 கட்ட வேண்டும்)

பின்னர் இணையதளத்தில் உள்ள “ADD CHOICES” என்ற option மூலம் மாணவர்கள் விரும்பும் கல்லூரியில் உள்ள விரும்பும் பாட பிரிவை தேர்வு செய்யலாம், எத்தனை கல்லூரிகள் விருப்பமோ அத்தனை கல்லூரிகளை , பாட பிரிவுகளை தேர்வு செய்யலாம். உங்களின் முதல் விருப்பம் எது, இரண்டாம் விருப்பம் எது என வரிசைபடுத்தி கொண்டே செல்லலாம். உங்களுக்கு இடம் வழங்கும் போது உங்களின் முதல் விருப்பத்தை பார்ப்பார்கள் அது காலியாக இருந்தால் அதை உங்களுக்கு வழங்குவார்கள், இல்லை என்றால் இரண்டாவது விருப்பத்தை பார்ப்பார்கள் இப்படியே வரிசையில் உள்ள உங்களின் விருப்பத்தின் அடிப்படையில் காலியாக உள்ள இடத்தை உங்களுக்கு ஒதுக்குவார்கள் எனவே உங்களுக்கு எது மிக விருப்பமான கல்லூரியோ, பாட பிரிவோ அதை முதலில் குறிபிடுங்கள்.

கல்லூரி / பாட பிரிவுகளை எப்படி தேர்வு செய்வது ?

கடந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையின் விபரங்கள் http://tneaonline.in/ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்னிற்க்கு கடந்த ஆண்டு கிடைத்த கல்லூரி / பாட பிரிவுகளை பாருங்கள், இதில் இருந்து உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்னிற்க்கு எந்த கல்லூரியில் என்ன பிரிவில் இடம் கிடைக்கும் என தோராயமாக கணக்கிடலாம், இதை வைத்து கொண்டு கல்லூரி / பாட பிரிவுகளை உங்களின் விருப்ப பட்டியலில் சேருங்கள்.

பொறியியல் படிப்பில் எந்த பிரிவில் சேர்வது ?, எந்த கல்லூரியில் சேர்வது ? என்பதற்க்கான விளக்கங்கள் “என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ?” https://www.facebook.com/wisdomkalvi/posts/805392253167360/ என்ற ஆக்கத்திலும்,

“பொறியியல் (Engineering) படிக்கலாமா ? எந்த பிரிவில் சேரலாம் ?” https://www.facebook.com/wisdomkalvi/posts/842299609476624 என்ற ஆக்கத்திலும் உள்ளது. கல்லூரி, பாட பிரிவுகளை தேர்வு செய்யும் முன் அதை ஒரு முறை படித்து கொள்ளுங்கள்.

விருப்பபட்டியலை உறுதி செய்தல் :

அவர்கள் குறிபிட்ட 3 நாள்களுக்குள் உங்கள் விருப்ப பட்டியலை http://tneaonline.in/ இணையதளத்தில் பதிவு செய்யுங்கள், பின்னர் “LOCK MY CHOICES” என்ற option மூலம் உங்கள் விருப்ப பட்டியலை இறுதி செய்யுங்கள், இறுதி செய்யும் போது பதிவு செய்யப்பட்ட தொலைபேசிக்கு OTP நம்பர் வரும் அதை http://tneaonline.in/ வெப்சைடில் டைப் செய்து உங்கள் விருப்ப பட்டியல் இறுதி செய்யலாம், ஒரு முறை விருப்ப பட்டியலை இறுதி செய்தால் பின்னர் மாற்ற முடியாது எனவே இறுதி செய்யும் முன் கவனாமாக இருங்கள்.

தற்காலிக ஒதுக்கீடு :

மாணவர்களின் விருப்ப பட்டியல் அடிப்படையில் கல்லூரி மற்றும் பாட பிரிவு ஒதுக்கப்படும். அவர்கள் ஒதுக்கிய கல்லூரி / பாட பிரிவு நமக்கு பிடிக்கவில்லை என்றால் அடுத்த கட்ட கலந்தாய்வின் மூலம் நாம் வேறு கல்லூரி / பாட பிரிவுகளை தேர்வு செய்து கொள்ளலாம். (அதாவது மேற் சொன்ன முறையில் மீண்டும் புதிதாக விருப்ப பட்டியல் தயார் செய்து உறுதி செய்து இடங்களை பெறலாம்). ஒரு வேளை நாம் கேட்ட அனைத்து கல்லூரிகளிலும் இடம் இல்லை என்றால் நமக்கு ஒன்றும் ஒதுக்கப்படாது, அடுத்த கட்ட கவுன்சிலிங் மூலம் மீண்டும் புதிதாக விருப்ப பட்டியல் தயார் செய்து உறுதி செய்து இடங்களை பெறலாம். கடந்த ஆண்டு பொறியல் சேர்க்கை விபரங்களை பார்த்து நமது விருப்ப பட்டியலை தேர்வு செய்தால் இப்படி பட்ட சூழ்நிலை வராது, எனவே மாணவர்கள் அவர்களின் மதிப்பெண்னிற்க்கு ஏற்ப கல்லூரியை, பாட பிரிவிவை தேர்வு செய்யுங்கள்.

அவர்கள் வழங்கிய தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்ய 2 நாள்கள் வழங்கப்படும். அதற்க்குள் நாம் ஏற்று கொள்ள வேண்டும் அல்லது நிகாரித்துவிட்டு அடுத்த கட்ட கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும். எதுவுமே பிடிக்கவில்லை என்றாலோ, பொறியியல் படிப்பே வேண்டாம் என முடிவு செய்தாலோ கவுன்சிலிங்கில் இருந்து வெளியேறி விடலாம் (அதற்க்கான option இணையதளத்திலே உங்களுக்கு வழங்கப்படும்).

இறுதியாக அவர்கள் ஒதுக்கிய இடம் நமக்கு பிடித்து இருந்தால் அதை உறுதி செய்யலாம், பின்னர் நமக்கு Allotment order வழங்கப்படும், ஈ-மெயிலிலும் அனுப்புவார்கள் அல்லது http://tneaonline.in/ இணையதளத்திலும் download செய்து கொள்ளலாம். பின்னர் அந்த Allotment order-ரை பிரின்ட் அவுட் எடுத்து சம்மந்த பட்ட கல்லூரியில் குறிபிட்ட தேதிக்குள் சமர்பித்து மீத கட்டணத்தை செலுத்தி பொறியியல் படிப்பில் சேரலாம்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *