Latest:
Government ArticleGovernment Jobs

அரசு வேலையில் சேர நடத்தப்படும் TNPSC குரூப் 2 தேர்வுகளுக்கு தயாராவது எப்படி ? மற்றும் தேர்வின் விபரங்கள்

தமிழக அரசு வேலையில் சேர்வதற்க்கு பல்வேறு தேர்வுகளை TNPSC நடத்துகின்றது, தற்போது 1199 பணி இடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வை வரும் நவம்பர் மாதம் நடத்த உள்ளது. துணை பதிவாளர் (Sub Registrar, Grade-II), நகராட்சி ஆணையர் (Municipal Commissioner), தணிக்கை ஆய்வாளர் (Audit Inspector), உட்பட பல்வேறு அரசு பணிக்கு இந்த தேர்வு நடத்தப்படுகின்றது. அதிக படசமாக மாதம் ரூ.1,17,600 வரை சம்பளம் தரக்கூடிய இந்த தேர்வை பற்றிய விபரங்களை முதலில் பார்த்துவிட்டு, தேர்விற்க்கு தயாராவது எப்படி என்பதை பார்ப்போம்.

TNPSC குரூப் 2 தேர்வு விபரம் :

கல்வி தகுதி : பட்ட படிப்பு முடித்தவர்கள் (கலை, அறிவியல், பொறியியல் உட்பட ஏதாவது ஒரு டிகிரி படிப்பு படித்து இருக்க வேண்டும்)

வயது : குறைந்த பட்சம் 18, பிற்படுத்தபட்ட (BC, MBC, BC-Muslim), SC/ST வகுப்பினருக்கு அதிக பட்ச வயது இல்லை, பொது பிரிவினருக்கு அதிக பட்சம் 30, சில பணியிடங்களுக்கு 40.

விண்ணப்பிக்க கடைசி தேதி : செப்டம்பர் 9 (09/09/2018)

தேர்வு கட்டணம் : பதிவு கட்டணம் ரூ.150, தேர்வு கட்டணம் ரூ.250 (100 + 150 )

முதல் கட்ட தேர்வு நடைபெறும் தேதி : நவம்பர் 11 (11/11/2018) , காலை 10 மணி

மாத சம்பளம் : பணி இடங்களுக்கு ஏற்ப சம்பளம் மாறுபடும்,. குறைந்த பட்சம் ரூ.20,000 முதல் அதிக பட்சமாக ரூ.1,17,600 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

http://www.tnpscexams.in/upage.html இந்த இணையதளத்திற்க்கு சென்று முதலில் பதிவு செய்ய வேண்டும், பிறகு இந்த https://tnpscexams.in/piigrplive18/tfrmlogin.aspx லின்கில், பதிவு செய்யப்பட்ட user name, password மூலம் log-in செய்து கேட்கப்படும் விபரங்களை அளிக்க வேண்டும், உங்கள் புகைபடம் மற்றும் கையெளுத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் (upload) செய்ய வேண்டும்.

தேர்வு முறை :

இது மூன்று கட்டங்களாக நடைபெறும், முதல் கட்ட தேர்வு (Preliminary Examination), இரண்டாம் கட்ட தேர்வு (Main written examination), நேர்முக தேர்வு (Interview, oral).

முதல் கட்ட தேர்வு (Preliminary Examination) :

Objective type அதாவது சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறையில் வினாக்கள் இருக்கும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும், குறைந்த பட்சம் 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

இரண்டாம் கட்ட தேர்வு மற்றும் நேர்முக தேர்வு :

முதல் கட்ட தேர்வில் தேர்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம், இது எழுத்து தேர்வு , 3 மணி நேரம் நடைபெறும். 300 மதிப்பெண்ணிற்க்கு கேள்விகள் கேட்க்கப்படும். நேர்முக தேர்வு 40 மதிப்பெண்ணிற்க்கு இருக்கும், மொத்தம் 340 மதிப்பெண், குறைந்தது 102 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

தேர்வை பற்றி மேலும் விபரங்கள் தேவை பட்டால் கமென்டில் கேளுங்கள் விடை அளிக்கின்றேன் தேர்வை பற்றிய முழுவிபரங்களும் இந்த http://www.tnpsc.gov.in/notif…/2018_15_group_ii_services.pdf லின்கில் உள்ளது.

தேர்விற்க்கு தயாராவது எப்படி ?

முதல் நிலை தேர்வில் பொது பாடம் (General Studies), நடப்பு நிகழ்வுகள் (Current Events), தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். பொது பாடத்தில் (General Studies) இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடத்திலும், நடப்பு நிகழ்வுகள் (Current Events) பிரிவில் வரலாறு, புவியியல், அரசியல் அறிவியில் (political science) பாடங்களில் இருந்து கேள்வி கேட்கப்படும். இந்த தேர்விற்க்கான மொத்த பாட திட்டமும் (syllabus) இந்த https://tnpsc.news/tnpsc-group-2-syllabus/ லின்கில் உள்ளது.

பட்ட படிப்புதான் இந்த தேர்விற்க்கு தகுதியாக இருந்தாலும், பெரும்பாலான கேள்விகள் 6 முதல் 10 -ஆம் வகுப்பு புத்தகங்களில் இருந்துதான் கேட்கப்படும். எனவே இந்த தேர்விற்க்கு தயாராக விரும்பும் மாணவர்கள் தமிழக அரசு பாட நூல கழகம் வெளியிட்டு அரசு பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் 6 முதல் 10 -ஆம் வகுப்பு புத்தகங்களை வாங்கி படியுங்கள்.

முதலில் பாடதிட்டத்தை (syllabus) படித்து அதில் குறிபிடுள்ள பாடங்களை மட்டும் படித்தால் போதுமானது. புத்தங்கள் எல்லா புத்தக கடைகளிலும் கிடைக்கும், இலவசமாக http://www.textbooksonline.tn.nic.in/ இந்த லின்கில் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளாம்.

இந்த தேர்வு அவ்வபோது நடக்கும் தேர்வாகும், எனவே கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பை ஒரு முறை வாங்கிபடித்து பாருங்கள். இந்த மூலம் உங்களுக்கு தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை பற்றிய ஒரு புரிதல் கிடைக்கும், அதற்க்கு ஏற்றார் போல் உங்களை தயார் செய்துகொள்ளுங்கள். இது போன்ற கேள்விகளின் தொகுப்பு, மற்றும் அதற்க்கான விடைகள் அடங்கிய புத்தங்கள் கடைகளில் கிடைக்கும். பொதுவாக பயிற்சி நிறுவங்களில் சென்று பயிற்சி பெறுவதன் மூலம் எளிதில் இந்த தேர்வுகளில் வெற்றி பெறலாம். தமிழகத்தின் சென்னை உட்பட பல் வேறு பகுதிகளில் சிறந்த பயிற்சி நிறுவங்கள் உள்ளன. தேர்வு எழுதுவதற்க்கு முன் மாதிரி தேர்வு (mock exam) எழுதி பயிற்சி எடுத்துகொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் அறிவு திறன் உங்களுக்கு தெரியும், குறைந்த மதிப்பெண் எடுத்த பாடங்களுக்கு அதிக முக்கியதுவம் கொடுத்து படித்து மீண்டும் மாதிரி தேர்வு (mock exam) எழுதுங்கள்.

அரசு வேலை என்பதால் போட்டி கடுமையாக இருக்கும், எனவே நமக்கு எங்கே வேலை கிடைக்க போகின்றது என்ற அவ நம்பிக்கையில் தேர்வு எழுதாமல் விட்டு விடாதீர்கள், முதலில் தேர்வில் வெற்று பெறுவோம் என்று நம்பிக்கை வையுங்கள், அதிகமான நேரங்களை தேர்விற்க்கு தயாராவதற்க்கு செலவிடுங்கள், படிக்கும் போது கவனமாக படியுங்கள். படித்ததை எழுதி பாருங்கள். குறைந்த பட்ச மதிபெண் 90 என்றாலும் கூடுதல் மதிப்பெண் எடுக்க முயற்சி செய்யுங்கள். தேர்விற்க்கு தயாராவது சம்மந்தமாக கூடுதல் விபரங்கள் தேவை பட்டால் கமென்டில் கேளுங்கள் விடை அளிக்கின்றேன்.
S.சித்தீக்.M.Tech

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *