பள்ளி மாணவர்களின் ரோபோடிக்ஸ் (Robotics) அறிவை வளர்க்கும் வகையில் ரோபோடிக்ஸ் செயல் முறை பயிற்சி முகாம் (Robotics Workshop)
Wisdom கல்வி வழிகாட்டி சார்பாக பள்ளி மாணவர்களின் ரோபோடிக்ஸ் (Robotics) அறிவை வளர்க்கும் வகையில் ரோபோடிக்ஸ் செயல் முறை பயிற்சி முகாம் (Robotics Workshop) ஜூலை 13 அன்று சென்னையில் நடைபெற்றது.இதில் அமெரிக்க பல்கலை கழக பேராசிரியர் டாக்டர் ஜாஃபர் அலி அவர்கள் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் (Robotics) பயிற்சி அளித்தார்கள்,ozobot போன்ற ரோபோட்டை எவ்வாறு புரோக்ராம் செய்வது என்பதை செயல் முறையில் விளக்கி காட்டினார்கள், மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொறு மாணவர் குழுவும் ozobot ரோபாட்டை இயக்கும் புரொக்ராம்களை கணிணி மூலம் எழுதி ozobot ரோபாட்டை இயக்கி காட்டினார்கள்.மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்கும் வகையில் வரைதல் போட்டிகளும் நடத்தப்பட்டது, இந்த இலவச பயிற்சி முகாமில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.Wisdom கல்வி வழிகாட்டி நிறுவனர் S.சித்தீக்.M.Tech அவர்கள் இயந்திரங்களை இயக்கும் கணினி புரோக்ராம்கள் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றது, ரோபோடிக்ஸ் (Robotics) துறையில் சிறந்து விளங்க மாணவர்கள் தங்களின் அறிவை எந்த வகையில் வளர்த்து கொள்ள வேண்டும் என்று விளக்கினார்.சகோ. ரியாஸ்.B.Sc, சகோ.இம்தியாஸ்.B.sc சகோ.சதாம் (B.Sc) ஆகியோர் நிகழ்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து மாணவர்களை ஒருங்கினைத்தார்