காவல்துறையில் பணியாற்றும் கனவை இன்றே நிறைவேற்றுங்கள்!!!
இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதிவிகளுக்கான 2020 Online விண்ணப்பம் தொடங்கிவிட்டது. விண்ணப்பம் சமர்பிப்பதற்கான கடைசி நாள் – 22/10/2020.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை – ஆண், பெண் மற்றும் திருநங்கை), இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல்படை – ஆண்), இரண்டாம் நிலை சிறைக் காவலர்(ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் (ஆண்) பதிவிகளுக்கான பொது தேர்வு 2020க்கு www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். Online மூலம் பெறப்படும் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும், இதர விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
#காலிப்பணியிடங்கள்
11803 அதில் ஆண்கள் 8697, பெண்கள் மற்றும் திருநங்கை 3106.
#ஊதியம் விகிதம்
ரூபாய் 18,200 முதல் 52,900 வரை
#கல்வி தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுஇருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 10ம் வகுப்பில் தமிழை ஒரு மொழி பாடமாக படித்து இருக்கவேண்டும்.இல்லையெனில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும்.
#வயது
18 வயது நிரப்பியராகவும் 26 வயதுக்கு உட்பட்டவராகவும்.
#சிறப்பு ஒதுக்கீடுகள்
5% – முன்னாள் இராணுவத்தினர், முன்னாள் மத்திய துணை இராணுவப்படையினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ளோர்.
10% – விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு.
3% – ஆதரவற்ற விதவை.
# தேர்வு முறைகள்
எழுத்துத் தேர்வு – ( 80 மதிப்பெண்கள்) பகுதி அ: பொது அறிவு 50 மதிப்பெண்கள்
பகுதி ஆ: உளவியல் 30 மதிப்பெண்கள்
உடற்திறன் போட்டிகள்- 15 மதிப்பெண்கள் , உடற்திறன் போட்டிகள் கீழே கொடுக்கப்டடுள்ளது.
சிறப்பு மதிப்பெண்கள் – 5 மதிப்பெண்கள், தேசிய மாணவர் படி சான்றிதழ் – 2 மதிப்பெண்கள், நாட்டு நலப்பணி திட்டம் சான்றிதழ் – 1 மதிப்பெண்கள், விளையாட்டு சான்றிதழ் – 2 மதிப்பெண்கள்
மொத்தம் 100 மதிப்பெண்கள்.
#எழுத்துத் தேர்வு
எழுத்து தேர்வு 100 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறும், விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வில் கலந்து கொள்வதற்கான மாவட்டத்தைத் தகவல் இணைதளத்தில் உள்ளது.
எழுத்து தேர்வுக்கான நேரம் 1 மணி 20 நிமிடங்கள்
எழுத்து தேர்வில் தகுதி மதிப்பெண்ணாகக் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் விண்ணப்பதாரர்கள் பெற வேண்டும். இருப்பினும்,அடுத்தகட்ட தேர்வான அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல்,உடற்கூறு அளத்தல்,உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பெரும் உயர்ந்தபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் மொத்தக் காலிப்பணியிட எண்ணிக்கைக்கேற்ப 5 மடங்கு விண்ணப்பதாரர்கள் மட்டுமே வகுப்பு வாரியாக அழைக்கப்படுவார்கள்.
#உடற்கூறு அளத்தல்
பொதுப்போட்டி பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட (இஸ்லாமியர்கள்) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் – ஆண்களுக்கான உயரம் 170cm இருக்கவேண்டும், பெண்களுக்ககான உயரம் 159cm இருக்கவேண்டும்.
ஆண்களுக்கான மார்பளவு, சாதாரண நிலையில் 81cm மூச்சை உள்வாங்கிய நிலையில் 81cm முதல் 86cm வரை இருத்தல் வேண்டும்.பெண்களுக்கு கிடையாது
#உடல் தகுதித் தேர்வு
ஆண்கள் – 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் திருநங்கை – 400 மீட்டர் தூரத்தை 30 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும்.
முன்னாள் ராணுவத்தினர்- 1500 மீட்டர் தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.
#உடற்திறன் போட்டிகள்
ஆண்கள் – கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம்.
பெண்கள் – நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து எறிதல் அல்லது குண்டு எறிதல்,100 மீட்டர் அல்லது 200 மீட்டர் ஓட்டம்.
முன்னாள் ராணுவத்தினர்- குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம்
#அசல் சான்றிதழ் சரிபார்த்தல்
அசல் சான்றிதழ் சரிபார்த்தல்,உடற்கூறு அளத்தல்,உடல் தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகள் நடத்துவதற்கு முன்னரே நடத்தப்படும்.
#தேர்வு கட்டணம் – 130 ரூபாய்
#இணையவழி விண்ணப்பம் சமர்பிப்பதற்கான கடைசி நாள் – 22/10/2020
#எழுத்து தேர்வு நடைபெறும் நாள் -11/12/2020
இந்த வேலை வாய்ப்பை பற்றிய அனைத்து விபரங்களும் கீழ்காணும் அறிவிப்பில் உள்ளது
கூடுதல் விபரம் தேவைபடும் விண்ணப்பதாரர்கள் கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.
நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி https://www.facebook.com/wisdomkalvi பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.